கடலூரில் குவார்ட்டர் பாட்டிலை கடகடன்னு குடித்த நபர்..குறுக்கே வந்த "ஓணான்".. அடுத்து நடந்ததை பாருங்க
கடலூர்: டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக நாளுக்கு நாள் புகார்களும், குற்றச்சாட்டுகளும் பெருகிவருவது, குடிமகன்களை அதிர செய்து வருகிறதாம். இதுகுறித்த முறையான நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன
கள்ளக்குறிச்சி, மரக்காணம் மதுபானங்கள் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.. அதனால்தான், தமிழகத்தில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரிக்க துவங்கியது..

புகார்கள்: டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், அதை வாங்க முடியாத பலரும் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து இறக்க நேரிடுகிறது.. எனவே, குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன.
இதற்கு நடுவில் தரமற்ற மதுவை விற்பனை செய்துவிட்டதாக புகார்களும் வெடிக்கின்றன. இப்படித்தான், கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்றில், மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில் வாங்கியிருக்கிறார்.. அந்த மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் கிடப்பதை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.
டாஸ்மாக்: இதுகுறித்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கொண்டுபோய் காட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. ஆனால், அந்நபருக்கு உரிய பதிலை யாருமே தராததால், புழுக்கள் இறந்துகிடந்த பாட்டிலுடன், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டார்.. பாட்டிலை காட்டி, புகாரையும் தந்தார்..
ஆனால் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்லி, அவரை போலீசார் திருப்பி அனுப்பி விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், புழு நிறைந்த மது பாட்டிலை தன்னுடைய செல்போனிலேயே வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
திட்டக்குடி: இதுபோலவே இப்போதும் கடலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திட்டக்குடி அருகே உள்ளது கீழ்ஆதனூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கொளஞ்சிநாதன்... இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்..
இவர் அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கியிருக்கிறார்.. மதுபாட்டில் மூடியை திறந்ததுமே கடகடவென மதுவை குடித்து, பாதி காலி செய்துவிட்டார்..
பிறகு, மீதமுள்ள மதுவையும் குடிக்க முயன்றார்.. அப்போதுதான் பாட்டிலில் ஓணான் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நொடிகளிலேயே கொளஞ்சிநாதனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது... இதைப்பார்த்து பதறிப்போன அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரபரப்பு: அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக கொளஞ்சிநாதன், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறார்கள்.. இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் மதுபாட்டிலில் பல்லி, புழுக்கள், ஓணான் போன்றவை விழுந்து கிடப்பதை பார்த்து குடிமகன்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications