அமைதி பூங்கா தமிழகம்.. ஹிஜாபை அகற்ற சொன்ன விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்றுமாறு பாஜக பூத் முகவர் கூறிய விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நிறைவடைந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில் மதுரை திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு போன்ற திடீர் சர்ச்சைகளும் ஏற்பட்டது.

மேலூரில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு அல்அமீன் பள்ளியில் வாக்களிக்கச் சென்ற இஸ்லாமிய பெண் ஒருவரை பாஜக நிர்வாகி ஹிஜாபை அகற்றக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட அந்த வாக்குச் சாவடியில் ஏஜெண்டாக இருந்த கிரிராஜன் என்பவர் வாக்களிக்க வந்த அப்பகுதியைச் என்ற இஸ்லாமிய பெண் வாக்காளர் ஒருவரின் ஹிஜாப்பைஅகற்றுமாறு கூறினார். இதற்கு அந்தப் பெண் வாக்காளர் மறுப்பு தெரிவித்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு
குறிப்பிட்ட அந்த பாஜக முகவரை வெளியேற்ற வேண்டும் என கூறிய வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சி முகவர்களும் வாக்குப்பதிவை மையத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இதனை வாக்குப் பதிவு மையத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 30 நிமிடத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் இவ்விவகாரம் பரவியது.

பாஜக முகவர் கைது
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வரும் நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் புகார் அளித்தனர் இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் பாஜக முகவர் கிரிராஜனை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடும் நடவடிக்கை தேவை
இந்த நிலையில் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்ன விவகாரம் கடும் நடவடிக்கை தேவை என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்," அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில்,மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம்,பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க முயன்ற கிரிராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications