உள்ளாடையில் எப்படி? 12 கிலோ தங்கத்தை பெண் எடுத்து வந்த விதம்.. ஆடிப்போன சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் பயணி, தனது உள்ளாடைக்குள் ரூ.7 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்த நிலையில், அவரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான பிஸியான விமான நிலையம் ஆகும். இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு 24 மணி நேரமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Teen girl arrested for smuggling Rs 7 crore gold hidden in underwear on Dubai to Chennai flight

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவர் துபாயில் இருந்து கேரளாவுக்கு நேரடியாக விமானத்தில் போகாமல், சென்னை வந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கோட்டயம் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் பேசியபோது முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் கேரள இளம்பெண்ணை, தனியறைக்கு அழைத்து சென்று முழு பரிசோதனை செய்தார்கள். அதில் அந்த பெண் அணிந்திருந்த உள்ளாடைக்குள் 12 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். அவரிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கேரள இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கேரளா செல்வதற்கு பதில் பலரும் சென்னை விமான நிலையம் வந்து அதன் பின்னர் கேரளா செல்வது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி, சென்னை வழியாக கடத்த முயற்சிகள் அதிகமாக நடக்கிறதா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக சோதனைக்கு உள்படுத்தி வருகிறார்கள். ஒரே பெண் 12 கிலோ தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+