Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது..' 12 மணி நேர வேலைக்கு ஆளுநர் தமிழிசையிடம் இருந்து வந்த ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு நேரம் அதிகரிக்கும் போது அவர்களின் பணி உற்பத்தி திறன் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாக சொல்கிறார்கள். அதனால் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துதான் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. என்று தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Telangana Governor Tamilisai Soundarrajan support 12-hour work days- says Leave it to the workers

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்" என்று தெரிவித்தார். எனினும், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 12 மணி நேர வேலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- நெரிசலான இடங்களில் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது. நான் ஒரு ஆளுநர் என்பதால் அரசியல் கருத்துக்களை சொல்ல முடியாது. 12 மணி நேர வேலை விவகாரத்தை பொறுத்தவரை.. தொழிலாளர்களின் விருப்பப்படி அவர்கள் 12 நேரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

8 மணி நேரமா.. 12 மணி நேரமா என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படை. ஏனெனில் இப்போது உலகம் முழுவதும் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் அதிக நேரம் வேலை செய்து விட்டு அதிக நேரம் ஓய்வு நேரங்கள் கொடுத்தால் அவர்களின் பணியின் சக்தி அதிகரிக்கிறது என்று மட்டும் இல்லை.. அவர்களின் குடும்ப வாழ்கை உள்பட பல பணிகளுக்கு பலனுள்ளதாக இருப்பதாக கருத்து உள்ளது.

இதனால், பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 12 மணி நேரமாக அதிகரிக்கப்படவில்லை. பணியின் நேரம் அதுதான்.. ஒருவர் 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம்..ஒருவர் 8 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம்... இது தொழிலாளர்களின் விருப்பபடி விட்டு விடுவது நல்லது.. இதை அரசியல் ஆக்கி போராட்டம் நடத்தி... தொழிலாளர்கள் விருப்பப்படலாம் அல்லவா..

நான் அரசியல் ரீதியாக இல்லாமல் மருத்துவராக சொல்லும் கருத்து என்றால்...மருத்துவ ரீதியாக இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால்.. தொழில் செய்யும் போது தொழிலாளர்கள் 4 நாட்கள் நன்றாக வேலை செய்து விட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்தால் தொழிலாளர்களின் பணியின் சக்தி அதிகரிக்கிறது.. ஓய்வு நேரம் அதிகரிக்கிறது.. அவர்களின் பணி உற்பத்தி திறன் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாக சொல்கிறார்கள்.

அதனால் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துதான் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. தொழிலாளர்களுக்கு நலன் பயக்கும் என்றால் அது நல்லாதுதான். தொழிலாளர்களின் விருப்பத்திற்கு தான் விட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. தொழிலாளர்கள் நன்றாக வேலை செய்தால் முதலாளிகள் பலன் அடைவார்கள். முதலாளிகள் பலன் அடைந்தால் தொழிலாளர்களுக்கு நல்லது.. அப்படித்தான். பணி நேரம் அதிகரிக்கவில்லை. பணி நேரம் தொழிலாளர்களிடமே விட்டு விடப்படுகிறது.

யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று பார்த்துக்கொள்ள வேண்டும்... தொழிலாளர்களிடமே இதை விட்டு விடலாம்.. ஏனெனில் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. புதிய சட்டங்கள் வருகிறது. தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்படுகிறோமா இல்லையா என்பது முடிவு செய்ய வேண்டியது தொழிலாளர்கள். பல மாநிலங்கள் இந்த முறையை பின்பற்றுகிறார்கள். கர்நாடகா, டெல்லியில் கூட இதை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+