Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுப்பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரம்..எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுப்பானையில் புத்தரிசியிட்டு வெல்லம் போட்டு பால் ஊற்றி செய்யும் பொங்கலின் ருசியே தனிதான். கூடவே நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து மணக்க மணக்க பொங்கல் கிண்டினால் ஊரெல்லாம் மணக்கும். நாளைய தினம் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அது போல பொங்கல் பானையில் இருந்து பால் பொங்கி அது வழியும் திசையும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்த்துமாம்.

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணத்தொடங்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை தொடங்கும் காலமே உத்தராயண புண்ணியகாலமாகும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நாளினை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

Thai Pongal 2023 : Pongal vaika nalla neram - which direction Pongal should flow?

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் நோன்பு கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் தொடர்புடையதாகவே இருந்துள்ளது மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.

மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது என்பதால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.

பொங்கல் பானையின் கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டு வைத்தும், அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப் பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு.

பொங்கல்பானை நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது நமது பண்பாடு. பானையில் இருந்து பொங்கிக் தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் வணங்குவார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பொங்கிய பால்வழிந்தால் நம் வீட்டில் நல்லது நடைபெறும் என்பது நம்பிக்கை.

பொங்கல் பானையில் இருந்து பொங்கும் பால் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், நாம் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. வீடு, வண்டி, வாகனம் வீட்டிற்குத் தேவையான ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். நகை, பணம் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை.

பொங்கல் பானையில் இருந்து பொங்கும் பால் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். வருமானம் அதிகரிப்பதோடு கூடவே சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் சுமூகமாக முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

பொங்கல் தெற்கு திசையில் பொங்கி வழித்தால் சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். எனவே உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

ஜனவரி 15ஆம் தேதி தை முதல் நாள் வீட்டு வாசலில் பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரையிலும் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும் நல்ல நேரமாகும். சிலர் மாலை நேரத்தில் பொங்கல் வைப்பார்கள். மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

ஜனவரி 16ஆம் தேதி தை 02ஆம் தேதி மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடைகள் வசிக்கும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிட்டு சாம்பிராணி புகை போட்டு கால்நடைகளை அலங்கரிக்க வேண்டும். காலை 06.30 முதல் 07.30 வரை மாட்டு தொழுவத்தில் பொங்கலிடலாம். மாலை 04.30 முதல் 05.30 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித் ததும்பும் விழா பொங்கல் விழா. பொங்கல் நாளில் அன்னை மகாலட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்ற நம்பிக்கை உள்ளது, அன்னை மகாலட்சுமியை தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம். பொங்கல் பண்டிகை நாளில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+