இது ஆளப்போற தமிழன் கொடி.. தலைவன் யுகம் பிறக்குது.. தவெக விஜய் கட்சி பாடலில் இதை கவனிச்சீங்களா
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இந்தக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். கொடியேற்றி வைத்த பிறகு தவெக கட்சி பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்சிப் பாடலில் என்னென்ன வரிகள் இடம்பெற்றுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு கட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில், விஜயின் அரசியல் வருகை குறித்த கருத்துக்களும், ஒரு கறை இல்லாத கையை புடிச்சி போக போறோமே... உள்ளிட்ட வரிகளும் இடம் பெற்றுள்ளன. பாடல் வரிகள் விவரம் வருமாறு:-

தமிழக வெற்றிக் கழக பாடல் வரிகள்:
வெற்றிக்கழக கொடியேறுது.. மக்கள் ஆசை நிஜமாகுது...
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது..
மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
தலைவன் கொடி பறக்குது.. தமிழன் யுகம் பொறக்குது...
முணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது...
சிருசும் பெருசும் ரசிக்குது... சிங்க பெண்கள் சிரிக்குது....
மக்களோட தொப்புள் கொடியில், மொளச்ச கொடியும் பறக்குது...
மனசில் மக்களை வைக்கும்.. தலைவன் வரும் நேரம் இது..
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்புடுது..
சிகரம் கெடச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு..
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது..
தமிழா தமிழா நாம வாழப்போறோமே...
ஒரு கறை இல்லாத கையை புடிச்சி போக போறோமே...
தமிழன் கொடி தரும கொடி... வீர கொடி, விஜய கொடி...
ஆதிய குடிய காக்கும் கொடி.. ரத்த சிவப்பு நிறமெடுத்தோம்..
ரெட்டை யானை பலம் குடுத்தோம்..
நரம்பில் ஓடும்.. தமிழுணர்வை உருவிக் கொடியின் உருக்கொடுத்தோம்..
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்.. பச்ச நீல, திலகம் வச்சோம்...
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றதை பறையடிச்சோம்..
தூரம் நின்னு பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது..
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது..
அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி...
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி..
வீடியோ வடிவில் பாடல்: பாடல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், போர்க்களத்தில் யானைகளுடன் சென்று சண்டையிடுவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு காளை என தமிழர்களின் பாரம்பரியம் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையிலும், ஆட்டோ தொழிலாளர்கள், வியாபாரிகள் என என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இடம் பெறும் வகையிலான சித்திரங்களும் இடம் பெற்று இருக்கின்றன.
அரசியலில் விஜய்: தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தாம் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய விஜய் முடிவு செய்தார்.
கட்சிக் கொடி: அதன்படி, இன்று காலை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் விஜய்யின் பெற்றோரும் பங்கேற்றனர். பிளிறும் யானைகள் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.
கட்சி கொடியை ஏற்றி வைத்த பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது... என இந்த பாடல் தொடங்குகிறது. போர்க்களத்தில் யானைகளுடன் சென்று சண்டையிடுவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது.. என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள்ளன.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications