தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் - ஸ்டாலின் மலர்தூவி மரியாதை- எச். ராஜா கடும் விமர்சனம்!
Recommended Video
சென்னை: தந்தை பெரியாரின் 46-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இன்று தந்தை பெரியாரின் 46-வது நினைவுநாள். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.
— M.K.Stalin (@mkstalin) December 24, 2019
ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை!
அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க #periyar! pic.twitter.com/Mdq3HIJoKB
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
— H Raja (@HRajaBJP) December 24, 2019
ஆகவே
இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது
"டெரரிஸ்ட்களும்
பெரியாரிஸ்ட்களும்"
ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது "டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும் என விமர்சித்துள்ளார். இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் பதிலளித்து வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications