சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்மாவட்டங்களில் "கிங்".. மொத்தமாக ஸ்வீப் செய்கிறது திமுக.. இதுமட்டும் நடந்தால் "அவ்வளவுதான்"!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் களநிலவரத்தை பார்த்தால் தென் மாவட்டங்களை மொத்தமாக திமுக ஸ்வீப் செய்து விடும் என்றே தோன்றுகிறது.. நேற்று வெளியான தந்தி டிவி கருத்து கணிப்பிலும் கூட தென்மாவட்டங்களில் திமுகவே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக நேற்று தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டது. இதுவரை 100 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 76 இடங்களையும், அதிமுக கூட்டணி 15 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் திமுக மொத்தமாக அனைத்து தொகுதிகளையும் வெல்ல வாய்ப்புள்ளது என்று இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் தென் மாவட்டங்கள் குறித்த சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தென் மாவட்டம்

தென் மாவட்டம்

இந்த முறை தென் மாவட்டங்களில் இருக்கும் அனைத்து தொகுதிகளையும் திமுக பெரும்பாலும் ஸ்வீப் செய்ய வாய்ப்புள்ளது என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மதுரைக்கு கீழ் திமுக கிளீன் ஸ்வீப் செய்யும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

குளச்சல்

குளச்சல்

  • தந்தி டிவி கணிப்பின்படி பின்வரும் தென் மாவட்ட தொகுதிகளில் திமுகவே அதிரடியாக வெற்றிபெறும்,
  • குளச்சல் தொகுதி - திமுக கூட்டணி 45 -51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
  • கிள்ளியூர் தொகுதி - திமுக கூட்டணி 49-55%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • மானாமதுரை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 3-6%, அமமுக 6-12%
  • ராதாபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, அமமுக 2-5%
பத்மநாபபுரம்

பத்மநாபபுரம்

  • பத்மநாபபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 42-48%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • நாகர்கோவில் தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 44-50%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%, அமமுக 1-4%
  • கடையநல்லூர் தொகுதி - திமுக கூட்டணி 42-48%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%
  • திருவாடானை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%, அமமுக 713%
திருச்செந்தூர்

திருச்செந்தூர்

  • திருச்செந்தூர் தொகுதி - திமுக கூட்டணி 42-46%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%
  • திருமங்கலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48%, திமுக கூட்டணி 39-45%, அமமுக 4-10%, நாம் தமிழர் 36%, மநீம 2-5%,
  • விளவங்கோடு தொகுதி - திமுக கூட்டணி 47-53%, அதிமுக கூட்டணி 43-49%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%
  • கன்னியாகுமரி தொகுதி - திமுக கூட்டணி 47 -53%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • நாங்குநேரி தொகுதி- திமுக கூட்டணி 44-50%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 2-5%, அமமுக 5-11%
திருப்பத்தூர்

திருப்பத்தூர்

  • திருப்பத்தூர் சிவகங்கை தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-43%, நாம் தமிழர் 3-6%, அமமுக 5-11%
  • ஓட்டப்பிடாரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 3-9
  • ராமநாதபுரம் தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-33%, அமமுக 6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%,
  • தூத்துக்குடி தொகுதி - திமுக கூட்டணி 48-54%, அதிமுக கூட்டணி 41-57%, மநீம 1-4%, அமமுக 1-4%
  • விருதுநகர் தொகுதி - திமுக கூட்டணி 37-43 %, அதிமுக கூட்டணி 35-41%, அமமுக 12-18%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%,
எப்படி

எப்படி

இதில் தென் மாவட்டங்களில் அதிகமாக அதிமுகவின் வாக்குகளை அமமுக, நாம் தமிழர் பிரிக்கிறது. முக்கியமாக அமமுக பல இடங்களில் அதிமுகவின் வாக்குகளை குறைக்கிறது. அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிப்பதால் திமுக வெற்றிபெறுகிறது. தென் மாவட்டங்களில் திமுக, அதிமுக இடையில் மிகப்பெரிய கேம் சேஞ்சராக அமமுக இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Thanthi Tv opinion poll: DMK will sweep south districts of Tamilnadu easily against ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X