சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நினைக்கிற மாதிரி இல்லை.. கொங்கில் பெரிய டிவிஸ்ட் காத்திருக்கு.. "அந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கொங்கு மாவட்டங்களில் மிக கடுமையான போட்டி நிலவும் என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 50 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு தந்தி டிவி மூலம் வெளியிடப்பட்டது. நேற்று கொங்கு மாவட்டங்கள் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் நிலவரம் குறித்து கருத்து கணிப்பில் கூறப்பட்டது.

மொத்தமாக 50 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 19 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இதில் அதிமுக கூட்டணிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி கூறியுள்ளது.

எத்தனை

எத்தனை

50ல் 15 தொகுதிகள் இழுபறி உள்ள தொகுதிகள் என்று தந்தி டிவி சர்வே குறிப்பிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை 150 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 95 இடங்களையும், அதிமுக கூட்டணி 31 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கணிப்பு

கணிப்பு

தந்தி டிவி கணிப்பின்படி பின்வரும் தொகுதிகளில் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளது.

  • கூடலூர் - திமுக+ 48-54%, அதிமுக+ 42-48%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%
  • வால்பாறை - திமுக+ 45-51%, அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5%
  • கவுண்டம்பாளையம்: திமுக 43%-49% அதிமுக 42%-48% மநீம 5-8%; நாம் தமிழர் 2%- 5% அமமுக 1%-4%:
  • திருப்பூர் தெற்கு: திமுக 40%-46%; அதிமுக 38%-44% ; மநீம 6% - 12%; அமமுக 3%-6%; நாம் தமிழர் 3%-6% ஆதரவு-
  • அந்தியூர்: திமுக 45%-51% ; அதிமுக 40%-46%; சமக 3%-6%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5% ஆதரவு-
  • பவானிசாகர்: இ.கம்யூ 46%-52%; அதிமுக 41%-47%; நாம் தமிழர் 3%-6%; மநீம 2%-5%; தேமுதிக 1%-4% ஆதரவு-
  • பெருந்துறை: கொ.ம.தே.க. திமுக கூட்டணி 35%-41%; அதிமுக 34%-40%; சுயேட்சை (தோப்பு வெங்கடாசலம்) 14%- 20%; நாம் தமிழர் 3%-6%; மநீம 3%-6% ; தேமுதிக 1%-4%
திமுக வெற்றிவாய்ப்பு

திமுக வெற்றிவாய்ப்பு

  • ஈரோடு மேற்கு: திமுக 46%-52% ; அதிமுக 39%-45%; மநீம- 3%-6% ;நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5%
  • கெங்கவல்லி - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5 %
  • சேலம் வடக்கு - திமுக+ 43-49%, அதிமுக+ 38-44%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10 %
  • திருச்செங்கோடு - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 1-4%
  • சேந்தமங்கலம் - திமுக+ 43-49%, அதிமுக+ 39-45%, அமமுக +5-8%, நாம் தமிழர் 1-4%, மநீம+ 1-4%
  • இந்த 12 தொகுதிகளில் திமுகவிற்கு சாதகமாக உள்ளது.
அதிமுக

அதிமுக

பின் வரும் தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது.

  • மேட்டுப்பாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, -
  • கோவை வடக்கு: அதிமுக 42%- 48% ; திமுக 39%-45% ; மநீம 5%-11%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 1%-4%
  • தொண்டாமுத்தூர்: அதிமுக 42%- 48%; திமுக 41%-47%; மநீம 4%-7%; நாம் தமிழர் 4%-7%; அமமுக 2%-5%
  • அவினாசி: அதிமுக 46%-52% ; திமுக 42%-48%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4%; மநீம 1%-4%
  • பல்லடம்: அதிமுக 43%-49% ; மதிமுக 40%-46%; மநீம 4% - 7%; நாம் தமிழர் 3%-6% ஆதரவு
  • திருப்பூர் வடக்கு: அதிமுக 43%-49% ; இந்திய கம்யூனிஸ்ட் 40%-46%; மநீம 6% - 9%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4% ஆதரவு
  • உடுமலைப்பேட்டை: அதிமுக 44%- 50% ; காங்கிரஸ் 42%-48%; மநீம 3%-6%; நாம் தமிழர் 2%-5%; அமமுக 2%-5% ஆதரவு
அதிமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள்

அதிமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள்

  • கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக 46%- 52%; திமுக 41%-47%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5%; மநீம 1%-4% ஆதரவு
  • ஈரோடு கிழக்கு: த.மா.கா. 42%-48%; காங். 41%-47% ; மநீம- 5%-8% ;நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5%
  • சங்ககிரி - அதிமுக+ 45-54%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%
  • சேலம் தெற்கு - அதிமுக+ 44-50%, திமுக+ 39-45%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8% -
  • சேலம் மேற்கு - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%
  • ஓமலூர் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5%
நாமக்கல்

நாமக்கல்

  • ஏற்காடு - அதிமுக+ 45-51%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%
  • ஆத்தூர் - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%
  • குமாரபாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%
  • நாமக்கல் - அதிமுக+ 38-44%, திமுக+ 37-43%, அமமுக +10-16%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%
  • கொங்கில் இருக்கும் இந்த 17 தொகுதிகள் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது..

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

கொங்கில் திமுகவிற்கு 12 இடங்களிலும், அதிமுகவிற்கு 19 இடங்களிலும் வெற்றிவாய்ப்பு உள்ளது. அதிலும் சேலம் தவிர்த்து மற்ற மாவட்ட தொகுதிகளில் மிக கடுமையான போட்டி காத்து இருக்கிறது. இதில் நோட் செய்ய வேண்டிய விஷயம் நாமக்கல், ஏற்காடு, சங்ககிரி, ஈரோடு கிழக்கு, தொண்டாமுத்தூர், பெருந்துறை, கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுக இடையே வாக்கு சதவிகிதம் வேறுபாடு வெறும் 1%தான் உள்ளது.

ஸ்வீப்

ஸ்வீப்

திமுக, அதிமுக இடையே பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கொங்கு மாவட்டத்தில் அதிமுகவோ, திமுகவோ மொத்தமாக ஸ்வீப் செய்ய வாய்ப்பே இல்லை. இங்கு கண்டிப்பாக மிகப்பெரிய போட்டி நிலவும். கடைசி கட்டத்தில் திமுகவோ, அதிமுகவோ பெரிய அளவில் டிவிஸ்ட் கொடுக்க வாய்ப்புள்ளது.

Recommended Video

    சட்டசபை தேர்தலில் BJP ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு இல்லை - ஜுனியர் விகடன் சர்வே|Oneindia tamil
    வாய்ப்பு

    வாய்ப்பு

    பொதுவாக கொங்கு மண்டலம் அதிமுகவிற்கு மிகவும் வலுவான கோட்டையாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் திமுகவும் இங்கு வலுவாக போட்டியிடுகிறது. திமுகவும் பல தொகுதிகளில் கணக்கை தொடங்க வாய்ப்புள்ளது. கொங்கு மாவட்டங்கள் தமிழக சட்டசபை தேர்தலில் கேம் சேஞ்சராக மாற வாய்ப்புள்ளது.

    English summary
    Thanthi Tv opinion poll: Kongu region will see an interesting fight between DMK and AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X