தனித்து மலர்ந்த“தாமரை”..திமுக அதிமுகவுக்கு டஃப் கொடுத்து வின்னிங்.. ஸ்வீட் எடுத்து கொண்டாடும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையிலும் சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி அமைப்புகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 21 மாநகராட்சிகளையும் தமிழகத்தில் தற்போதைய திமுகவே கைப்பற்றியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

இதேபோல 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ள நிலையில், அதிமுக 3 நகராட்சிகள் 5 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அமமுக , பாமக, சுயேட்சைகள் உள்ளிட்டோரும் கணிசமான இடங்களை வென்றுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பமாக ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று நிலையில் குறிப்பாக தனித்து களம் கண்ட பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்த பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாது என பலரும் கூறி வந்த நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாஜக வெற்றிகளை பெற்றுள்ளது. 200 வார்டுகளை கொண்ட தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளது தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதேபோல நாகர்கோயில் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் வெற்றி பெற்று தங்கள் இருப்பை உறுதி செய்துள்ளனர்.

தனித்து போட்டியிட்ட பாஜக

தனித்து போட்டியிட்ட பாஜக

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் மனுவேல் குலுக்கல் முறையில் அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருந்தபோதும் நகராட்சியாக இருந்த போது நாதர் கோயிலைக் கைப்பற்றிய பாஜக தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை இழந்துள்ளது. இருந்தபோதிலும் மொத்தமுள்ள 52 பந்துகளில் 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நாகர்கோவிலை பாஜகவினர் தங்கள் கோட்டை என கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாஜக கொண்டாட்டம்

பாஜக கொண்டாட்டம்

அடுத்ததாக மாநகராட்சியை பொருத்தவரை முதல் நேரடி தேர்தலை காணும் மாநகராட்சியான திண்டுக்கல்லில் 14வது வார்டில் பாஜக மாவட்டத் தலைவரான தனபால் வெற்றி பெற்றுள்ளார். இவர் இதே வார்டில் திண்டுக்கல் நகராட்சியாக இருந்த போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். தற்போது திமுக சார்பில் அங்கு போட்டியிட்ட வேட்பாளர் சரவணன், அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்வாணன் ஆகியோரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் தனபால் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல பல உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜகவினர் மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+