தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. சென்னையில் மாநகராட்சி பறக்கவிடும் "ராட்சச" ட்ரோன்கள்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை மாநகராட்சி, மழைக்காலத்தில் ட்ரோன்கள் மூலம் நகரின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வெள்ள வரைபடத்தை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் வலுவான வடகிழக்கு காற்று வலுப்பெற்ற பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியது.

புயல் உருவானது: அதன்படியே மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஹாமூன் புயலாக வலுப்பெற்று அதன்பின் கரையை கடந்தது.
வானிலை மையம் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல்; இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி, மழைக்காலத்தில் ட்ரோன்கள் மூலம் நகரின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வெள்ள வரைபடத்தை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இந்த கணக்கெடுப்பு தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் பாயும் கால்வாய்களை கண்டறிந்து, வெள்ளப்பெருக்கை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த இயக்கமானது விடுபட்ட நதி இணைப்புகளை அடையாளம் காணவும், ஆறுகளின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மாநகராட்சி அமைப்பிற்கு உதவும்.
செயலி உருவாக்கம்; தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவு சென்னை மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பருவமழை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி தண்ணீர் தேங்குவது மற்றும் விழுந்த மரங்களைப் பற்றிய புகாரளிக்கலாம். அதே நேரத்தில் அதிகாரிகள் இந்த புகார்களை கண்காணித்து பதிலளிக்க முடியும்.
வொர்க்ஃபோர்ஸ் ஆப் எனப்படும் இந்த செயலி, பல்வேறு முனிசிபல் ஏஜென்சிகளுக்கான தொடர்புத் தகவல்களையும் கொண்டிருக்கும். இது நீர் நிலைகளை நிகழ்நேர கண்காணிப்பை செய்து வெள்ளத்தை தடுக்க உதவும். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கும். கூடுதலாக, பல்வேறு குடிமைப் பிரச்சினைகளுக்கான புகார் தீர்வை மையப்படுத்துவதற்காக, இந்த பக்கத்தை அதி நவீன் தொழில் நுட்பத்துடன் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications