ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால்தான் வருகைப்பதிவு..அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை! மாணவர்கள் ஷாக்
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் பங்கேற்றுள்ள நிலையில், மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப்பதிவு செய்யப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அதாவது இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் செமஸ்டர் தேர்வு வர உள்ள நிலையில், மாணவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்டாயப்படுத்துவது சரியல்ல என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மாணவர்கள் வருகை குறித்து நாங்கள் பதிவு செய்யவில்லை. அப்படி சொன்னால் மட்டுமே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று சொல்லியிருந்தோம். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அரங்கத்தை நிரப்ப வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. லேப் வகுப்புகளை தவிர்த்துவிட்டு நிகழ்ச்சி வர கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியும் ஒரு வகுப்புதான். என லேப் வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படாது” என்று விளக்கமளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications