சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்! உங்க ஊர் இருக்கா?

Google Oneindia Tamil News

சென்னை : கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

விவசாயத்திற்கு முக்கிய உயிர்நாடியாக விளங்கும் தென்மேற்கு பருவமழை கடந்த முன்னதாக தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை பெய்யும்

மிதமான மழை பெய்யும்

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ஆம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 1,2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வரும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மழை அளவு

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் தல்லாகுளம் (மதுரை) 7, கள்ளிக்குடி (மதுரை), மதுரை தெற்கு (மதுரை) தலா 6, சூரளக்கோடு (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 5, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 4, அன்னவாசல் (புதுக்கோட்டை), திருமங்கலம் (மதுரை), விரகனூர் அணை (மதுரை) தலா செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை


இன்றும், நாளையும் இலட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

English summary
The Chennai Meteorological Department has forecast light to moderate showers with thundershowers at a few places in Tamil Nadu, Puthuvai and Karaikal as the southwest monsoon begins in Kerala and adjoining areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X