ஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா? காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முதல்வர் மீது வழக்கு தொடருவேன்: வைகோ ஆவேசம்!

    சென்னை: மதிமுக எம்பி வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவும் பிரச்சனை திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கூட உடைய வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்

    காஷ்மீர் பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் பேசிய மதிமுக எம்பி வைகோ, காங்கிரஸ் மீது கடுமையான புகார்களை வைத்தார். காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிதான் பச்சை துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே காங்கிரஸ்தான் என்றார்.

    இதனால் காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிகளுக்கு இடையில் பெரிய பிரச்சனை வந்தது. இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்களும் வரிசையாக விமர்சனம் செய்து வார்த்தைப் போரில் ஈடுப்பட்டனர்.

    என்ன பாஸ்

    என்ன பாஸ்

    மதிமுக எம்பி வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். வைகோ யாருக்குமே விசுவாசமாக இருந்தது கிடையாது. அவரின் அரசியல் பாதையை கவனிக்கும் எல்லோருக்கும் இது தெரியும். வைகோ தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டார்.

    யார் வைகோ

    யார் வைகோ

    இந்த நிலையில் வைகோவின் இந்த விமர்சனம் மற்றும் சண்டைகளால் காங்கிரஸ் கட்சி திமுக மீது கோபத்தில் இருக்கிறது. ஆம் திமுக மீது தற்போது காங்கிரஸ் தரப்பு மனவருத்தத்தில் உள்ளது. வைகோ மீது எந்த விதமான கேள்வியையும் திமுக எழுப்புவதில்லை. வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்தது குறித்து திமுகவிற்கு வருத்தம் இல்லை.

    ஒரே கூட்டணி

    ஒரே கூட்டணி

    ஒரே கூட்டணியில் இருந்தும் கூட வைகோவின் கருத்து குறித்தும் அவரின் காங்கிரஸ் மீதான விமர்சனம் குறித்தும் திமுக எதுவும் சொல்லவில்லை என்ற கோபத்தில் தற்போது காங்கிரஸ் இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்களும் , தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளும் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    இனியும்

    இனியும்

    வைகோ இனியும் இப்படி பேச கூடாது. அது நம்முடைய கூட்டணிக்குத்தான் சிக்கலாகும் என்று கூறியுள்ளனர். ஆனால் திமுக தரப்பு காங்கிரஸ் கட்சியின் புகார், வேண்டுகோள் எதையும் கணக்கில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வைகோவின் கருத்துக்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது, அவர் பேசுவதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று திமுக நிலைப்பாடு எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

    திமுக

    திமுக

    ஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை, இதுதான் கூட்டணி தர்மமா என்று காங்கிரஸ் கேட்டுள்ளது. இதனால் தற்போது திமுக காங்கிரஸ் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். திமுக காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட பார்க்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 இடங்களில் வென்று இருக்கலாம். ஆனால் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியான விஷயமாக இருக்காது என்று திமுக நினைப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் இல்லவே இல்லை

    ஆனால் இல்லவே இல்லை

    அதேபோல் 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் எப்படி வேண்டுமானாலும் கூட்டணி அமையலாம். என்ன வேண்டுமானாலும் அப்போது நடக்கும் . ரஜினி வேறு கட்சி தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் திமுக தனது கூட்டணி கதவை திறந்து வைத்து இருக்க திட்டமிட்டு, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+