மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்.. சட்டசபையில் சீறிய முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் சட்டசபை இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று காலை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. நீட் விலக்கு மசோதவை திருப்பி அனுப்பியது குறித்த காரணங்களை ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய கடிதத்ததை சட்டசபையில் சபாநாயகர் வாசித்தார்.
நீட் விலக்கு மசோதவை சட்டசபையில் மீண்டும் அமைச்சர் ம.சுப்ரமணியன் தாக்கல் செய்தார். இதனையடுத்து அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் தங்களின் கருத்துக்களை கூறினர். அனைவரும் நீட் விலக்கு மசோதாவை ஆதரிப்பதாக கூறினர். பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை யூகங்களின் அடிப்படையிலானது என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. தனிப்பட்ட சிலரின் யூகங்களின் அடிப்படையில் அல்ல. ஒரு லட்சம் பேரின் கருத்துக்களை கேட்டே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தயார் செய்துள்ளது.

அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் ஆளுநர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என்றும் சாடினார். சட்டசபையின் சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் ஆளுநர் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். மசோதாவை மீண்டும் நிறைவேற்றி திருப்பி அனுப்பு வைப்பதன் மூலம் இந்தியாவுக்கே ஒளிவிளக்கை ஏற்றி வைக்கிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவசர சட்டம்
நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல. 2010ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்டபோதே திமுக கடுமையாக எதிர்த்தது. நீட் தேர்வு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று 2013ல் உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ல் பாஜக ஆட்சி மத்தியில் வந்தபோது அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின்
Recommended Video

ஆளுநர் கட்டுப்பட வேண்டும்
அரசியல் சாசனத்தின் படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இறுதியாக தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க என்று மூன்று முறை கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனையடுத்து சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவு மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு இன்றே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு










Click it and Unblock the Notifications