ஆணுறை, சிப்ஸ், திராட்சை.. புத்தாண்டுக்கு நம்ம மக்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருட்கள் லிஸ்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம்தான். நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து கேக் வெட்டி, இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதேசமயம் பிடித்த உணவுகள், குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் என நண்பர்களுடன், குடும்பத்தினருடன் விருந்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

new year

பொதுவாக இ-நிறுவனங்களிடம் எந்தவொரு நிகழ்ச்சியாகவும், பண்டிகையாகவும் இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் பொருள்களை ஆர்டர் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த 2025 புத்தாண்டுக்காக இந்திய மக்கள் பலரும் இ-நிறுவனங்களில் ஆன்லைனில் பல்வேறு பொருள்களை ஆர்டர் செய்துள்ளனர். 2025 புத்தாண்டிற்கு பொதுமக்கள் பலரும் அதிகம் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்..

பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி போன்ற உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்கள் மூலமாக மக்கள் நேற்று அதிகளவிலான பொருள்களை வாங்கியுள்ளனர். அதில், பொதுமக்கள் அதிக அளவில் சிப்ஸ், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், திராட்சை, ஐஸ்க்ரீம், ஆணுறை போன்றவற்றை வாங்கியுள்ளனர். பலரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

ப்ளிங்கிட் எனும் இ-நிறுவனம் மட்டும் டிசம்பர் 31 ஆம் தேதி 2.3 லட்சம் ஆலு புஜியா பாக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தது. அதேபோல, ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் ஒரு நிமிடத்துக்கு 853 சிப்ஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்துள்ளது. அதேபோல, பால், சிப்ஸ், திராட்சை, பன்னீர், சாக்லேட்டுகள் போன்றவற்றை அதிகம் பேர் ஆர்டர் செய்து மகிழ்ந்துள்ளனர்.

அதேபோல, விருந்துகளுக்கான ஐஸ்கட்டிகள், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்களையும் பொதுமக்கள் பலரும் அதிகளவில் ஆர்டர் செய்திருந்தனர். பிளிங்கிட் இ- நிறுவனம் இரவு 8 மணி வரை 6 ஆயிரத்து 834 ஐஸ்கட்டிகளை விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல், நேற்று ஒரே நாளில் அதிக அளவில் ஆர்டர் வந்த நாளாகவும், ஒரு நிமிடத்தில் அதிக ஆர்டர்கள் வந்த நாளாகவும், ஒரு மணி நேரத்தில் அதிக ஆர்டர்கள் குவிந்த நாளாகவும், அதிக டிப்ஸ் கொடுக்கப்பட்ட நாளாகவும் டிசம்பர் 31 ஆம் தேதி அமைந்திருந்ததாக பிளிங்கிட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் நேற்று அதிகளவில் அதிக சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதேபோல, திராட்சைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+