கியாஸ் சிலிண்டரில் இருக்கும் குறியீடு பின்னணி.. இப்படி சிலிண்டர் வந்தால் உடனே திருப்பி அனுப்பிடுங்க
சென்னை: நீங்கள் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களில் குறிப்பிட்டுள்ள வார்த்தை, குறியீடுகளை பலர் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் பலர் அதனை சாதாரணமாக நினைத்து அந்த பொருட்களை பயன்படுத்துவார்கள்.. ஆனால் அந்த வார்த்தை, குறியீடுகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைக்காக வைக்கப்பட்டவை என்பது பலருக்கும் தெரியாது..இன்று முதல் சிலிண்டர் வந்தால் சில பாதுகாப்பு குறியீடுகளை பார்த்தால் உடனே சிலிண்டரை திருப்பி அனுப்பிவிடுங்கள்.
தமிழ்நாட்டின் 95 சதவீதம் மக்கள் விறகு அடுப்பில் இருந்து கேஸ் அடுப்பிற்கு மாறி 20 வருடங்களை கடந்து விட்டது. கேஸ் தான் இன்றைக்கு எல்லா வீடுகளிலும் பிரதானமாக இருக்கிறது . கேஸ் புக்கிங் செய்தால், வீட்டிற்கு வந்து டெலிவரி செய்கிறார்கள். அந்த கேஸ் சிலிண்டர் வாங்கும் போது, கேஸ் லீக் ஆகிறதா, ஸ்டாண்ட் உடையாமல் சரியாக இருக்கிறதா, ஆடாமல் சிலிண்டர் இருக்கிறதா என்பதை மக்கள் பார்க்கிறார்கள்

அந்த கேஸ் சிலிண்டரின் கைப்பிடி பகுதி பிளேட்டில் A.25, B.26, C.27, D.28 என குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகளுக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. அந்த குறியீடு பாதுகாப்பு நடவடிக்கை நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட கேஸ் சிலிண்டரின் சோதனைக்கான காலத்தை குறிப்பதாக இருக்கும். அதாவது சிலிண்டரின் காலாவதி தேதி அல்லது சோதனை தேதியைக் குறிக்கும்.
இதில் ஒரு ஆண்டை நான்கு காலாண்டுகளாக பிரித்து அதில் முதல் காலாண்டு(ஜனவரி-மார்ச் மாதங்கள்) A என்றும், இரண்டாம் காலாண்டு(ஏப்ரல்-ஜூன்) B, மூன்றாம் காலாண்டு(ஜூலை-செப்டம்பர்) C, நான்காம் காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) D என்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்
தொடர்ந்து 25, 26... என்பன 2025, 2026-ம் ஆண்டுகளை குறிக்கும். இதன்படி A.25 என்று ஒரு கியாஸ் சிலிண்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தால் 2025-ம் ஆண்டில் ஜனவரி-மார்ச் மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கியாஸ் சிலிண்டரை கட்டாய சோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
குறிப்பிட்ட கியாஸ் சிலிண்டர் உறுதித்தன்மை, ஓட்டை, சேதம் உள்ளதா, வால்வு பகுதி சரியாக உள்ளதா? என்பன உள்பட பல்வேறு சோதனைகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும். அதன்பிறகே கியாஸ் நிரப்பி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு தான் அவை குறியீடாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
எனவே உங்கள் ஒருவர் வீட்டிற்கு 2026-ம் ஆண்டு ஏப்ரல்-ஜுன்(B.26) மாத காலக்கட்டத்தில் A.26(ஜனவரி-மார்ச்) குறியீடுடன் கூடிய கியாஸ் சிலிண்டர் வந்தால் சற்றும் தாமதிக்காமல் அதனை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அனுப்பி வைத்துவிட்டு உரிய காலத்திற்கான சிலிண்டரை வாங்க முயற்சிக்கலாம். அவை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாத கியாஸ் சிலிண்டராக இருக்கும். இதன்மூலம் கியாஸ் கசிவு, வெடிவிபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும்.
சிலிண்டர்கள் அதிக அழுத்தத்துடன் எரிவாயுவைச் சேமித்து வைத்திருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிலிண்டரில் துருப்பிடித்தலோ அல்லது விரிசலோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் வலிமையைச் சோதிப்பது பாதுகாப்பிற்கு அவசியமானது.எனவே வீட்டில் கியாஸ் சிலிண்டரை வாங்கும்போது இந்த குறியீட்டை பார்த்து வாங்குவது நல்லது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications