சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதாப்தியை விட 30 நிமிஷம் கம்மி.. இதுதான் வேகமா? வந்தே பாரத் ரயிலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக 'வந்தே பாரத்' ரயில் சென்னையிலிருந்து மைசூர் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு இந்த ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இது பிற்பகல் 12.30 மணிக்கு மைசூர் சென்றிருக்கிறது.

ஆனால் இந்த ரயில் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது "பயணத்தை 3 மணியிலிருந்து 40 நிமிடமாக குறைப்பதுதான் வளர்ச்சி. சதாப்தியை விட 30 நிமிடங்கள் வேகமாக போவதல்ல" என்று கூறியுள்ளனர்.

சந்திர கிரகணம்.. திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கள் 11 மணி நேரம் கோவில் நடை மூடல்..முழு விபரம் சந்திர கிரகணம்.. திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கள் 11 மணி நேரம் கோவில் நடை மூடல்..முழு விபரம்

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக நவீன 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ரயில் முதற்கட்டமாக இயக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வரை மூன்று வழித்தடங்களில் ரயில்கள் இயங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4வது வழித்தடமாக சென்னை-மைசூரு இடையே இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது.

பயண நேரம்

பயண நேரம்

சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பயணித்து மதியம் 12.30 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 'சதாப்தி' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மைசூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி நேரம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 6.40 மணி நேரம். சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பயணித்து மதியம் 12.30 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 'சாதாப்தி' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மைசூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி நேரம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 6.40 மணி நேரம்.

20 நிமிடங்கள்

20 நிமிடங்கள்

வெறும் 20 நிமிடங்கள் பயண இடைவெளி கொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் டிக்கெட்டு சதாப்தியை விட இரண்டு மடங்கு அதிகம் என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 4 வது வழித்தடமாக சென்னை-மைசூரு இடையே இந்த ரயில் வரும் 10ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்நிலையில் இந்த 'வந்தே பாரத்' ரயிலை இந்தோனேஷியாவின் அதிவேக ரயிலுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் வழித்தடத்தில் சீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வழித்தடத்தின் மொத்த பயண நேரம் 3 மணி நேரமாகும். ஆனால் சீனாவின் அதிவேக ரயில் இதனை வெறும் 40 நிமிடங்களில் கடந்துவிடும் என்று அந்நாட்டின் ரயில்வேத்துறை கூறியுள்ளது. இதனை குறிப்பிட்டு "பயணத்தை 3 மணியிலிருந்து 40 நிமிடமாக குறைப்பதுதான் வளர்ச்சி. சதாப்தியை விட 30 நிமிடங்கள் வேகமாக போவதல்ல" என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

English summary
It was announced that the indigenously manufactured high-speed 'Vande Bharat' train will run from Chennai to Mysore. According to this, this train was started as a trial run from Chennai MGR railway station at 5.50 am today. It reached Mysore at 12.30 pm. But netizens are criticizing this train. That means “the development is to reduce the journey from 3 hours to 40 minutes. 30 minutes is not faster than Shatabdi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X