அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா!
சென்னை: சினிமா ஷூட்டிங் என்றால் 'ஒன் மோர்' கேட்கும் விஜய், அரசியலில் மட்டும் ஏன் இப்படி 'நோ மோர்' சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் இப்போதைய கோலிவுட் டூ கோட்டை வரை ஓடிக்கொண்டிருக்கும் ஹாட் டாக்.
தேர்தல் ஆணையத்திடம் (ECI) முறையாக அனுமதி வாங்கியும், சொன்ன தேதியில் விஜய் ஏன் வரவில்லை என்ற கேள்வி தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏப்ரல் மாத 'மிஸ்ஸிங்' லிஸ்ட்!
மார்ச் 30 & ஏப்ரல் 6 வில்லிவாக்கம் & தி.நகர்
வில்லிவாக்கம் பகுதியில் பிரம்மாண்டமாகத் தயாரான மேடைகள் ஏமாற்றத்தையே சந்தித்தன. சென்னை தி.நகரிலும் ஏப்ரல் 6 அன்று இதே நிலைதான்.
ஏப்ரல் 9 & 11 குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி & திட்டக்குடி
கடலூர் மாவட்டத்தின் இந்த முக்கிய இடங்களில் இரண்டு முறை (9 மற்றும் 11-ம் தேதிகள்) அனுமதி வாங்கப்பட்டு, கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் கேன்சல் ஆனது.
ஏப்ரல் 12 & 13 கன்னியாகுமரி & கும்மிடிப்பூண்டி
தென்கோடி கன்னியாகுமரி முதல் வடக்கே கும்மிடிப்பூண்டி வரை திட்டமிடப்பட்ட பயணங்களுக்கும் இதே கதிதான்!
களத்தில் என்ன நடக்கிறது?
"தளபதி வர்றார்... வழி விடுங்க" என போஸ்டர் ஒட்டிய த.வெ.க தம்பிகள், இப்போது "அண்ணன் எப்போ வருவார்?" என ஏங்கித் தவிக்கும் நிலைதான் நீடிக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்குவதும், பின் கடைசி நிமிடத்தில் அந்த அனுமதியை ரத்து செய்வதும் ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது. இது குறித்து அரசியல் களத்தில் இருவிதமான விவாதங்கள் அனல் பறக்கின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்போ இந்த படலத்தை செமையாகக் கலாய்த்து வருகின்றன. "சினிமாவுல ரீ-டேக் வாங்கலாம், ஆனா அரசியல்ல இது எடுபடாது" என விமர்சிக்கும் அவர்கள், "விஜய்க்கு இன்னும் பேசுவதற்கு சரியான ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை. மேடை ஏறி எதைப் பேசுவது? யாரை விமர்சிப்பது? என்பதில் அவருக்குள் பெரும் குழப்பம் நீடிக்கிறது. அதனால்தான், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கி ஒரு 'பில்டப்' கொடுத்துவிட்டு, பிறகு நைசாக நழுவி விடுகிறார்" எனப் போட்டுத் தாக்குகின்றனர்.
குறிப்பாக, "கேமரா முன்னாடி நடிக்கிற மாதிரி மேடை முன்னாடி ஈஸியா பேசிட முடியாது பாஸ்!" என்பதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகும் எதிர்க்கட்சித் தொண்டர்களின் கமெண்ட்.
ஆனால், த.வெ.க தரப்பு இந்த விமர்சனங்களை அடியோடு மறுக்கிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சொல்லும் காரணம் வேறு. "விஜய்க்கு ஸ்கிரிப்ட் ஒன்றும் தேவையில்லை, அவர் மக்களுக்காகத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு இடத்தில் நுழைகிறார் என்றால் அங்கே கூடும் கட்டுக்கடங்காத கூட்டம், காவல்துறையினரால் சமாளிக்க முடியாத அளவுக்குப் போய்விடுகிறது.
குறிப்பாக வில்லிவாக்கம் மற்றும் நெய்வேலி போன்ற பகுதிகளில் அனுமதி வாங்கிய பிறகு, உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டைப் பார்த்து மிரண்டுவிட்டோம். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தளபதியைக் களமிறக்கினால், அது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக அமையும். அதனால்தான், சரியான பாதுகாப்புத் திட்டமிடலுக்காக இந்தத் தற்காலிகத் தள்ளிவைப்பு" எனத் தற்காப்பு ஆட்டம் ஆடுகிறார்கள்.
நிர்வாகிகள் அப்செட்!
ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்கி, பந்தல் போட்டு, கொடி நட்டு காத்திருக்கும் உள்ளூர் நிர்வாகிகள், "அண்ணன் வருவார்னு சொல்லி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியாச்சு, இப்போ என்ன பதில் சொல்றது?" எனத் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துள்ளனர்.
"லியோ" படத்தில் வருவது போல 'Badass' ஆக களமிறங்குவார் என்று பார்த்தால், தேர்தல் களத்தில் விஜய் 'சைலன்ட் மோடில்' இருப்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய் எப்போது தன் மௌனத்தைக் கலைத்து மைக்கைப் பிடிப்பார்?
காத்திருப்போம்... இது வெறும் ட்ரெய்லர் மட்டும்தானா அல்லது முழு படமும் இப்படித்தானா?
-
Vijay Cycle: காரைக்குடியில் சைக்கிளில் பயணித்த விஜய்! கூட்டத்தில் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங் -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
பெரம்பூரில் விஜய்.. மக்களின் பெரிய பிரச்சனை என்ன?- ‘பிகில்’ கவனிப்பாரா? -
இப்படி பண்றீங்களேம்மா.. விஜயின் கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து.. தொண்டர்கள் ஏமாற்றம் -
விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே












Click it and Unblock the Notifications