சூர்யாவுக்கு பறந்து வந்த எச்சரிக்கை.. அடுத்த சிக்கல்.. ஒன்று திரண்ட கிராமம்.. என்ன நடக்கிறது?
முதனை கிராம மக்கள் சூர்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்
சென்னை: இன்னொரு சிக்கல் சூர்யாவுக்கு வந்துள்ளது... இதையொட்டிய எச்சரிக்கையும் பறந்து வந்துள்ளது..!
Recommended Video
"ஜெய்பீம்" படம் இப்போதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. எனினும் சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார்.. இதற்கு சூர்யாவும் பதில் சொல்லி இருந்தார்.. விளக்கமும் தந்திருந்தார்..

அச்சுறுத்தல்
அத்துடன், "படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று பதிலடி தந்திருந்தார்.. ஆனாலும் ஆத்திரம் அதிருப்தி குறையாத பாமக தொடர்ந்து வருத்தத்திலேயே உள்ளது.. இதனால், சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அறிவித்து, அது தொடர்பான சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது.

பாதுகாப்பு
இதனால், சூர்யாவுக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு பிரச்சனை கிளம்பி உள்ளது.. கடலூரில் விருத்தாசலம் அடுத்த முதனை என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் ராசாகண்ணு என்பவர்.. இவரை கம்மாபுரம் போலீசார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை மையமாக வைத்துதான் ஜெய்பீம் படமும் எடுக்கப்பட்டுள்ளது..

மன்னிப்பு
இந்த படத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழும் முதனை கிராமத்தில் சாதிய வன்மத்தோடு ஒரு சாதியை மட்டும் தவறாக காட்சிப்படுத்தி இருப்பதாக சொல்லி, அந்த கிராம மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தின் தயாரிப்பாளர் சூர்யா இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கண்டன முழக்கங்களுடன் எச்சரிக்கை விடுத்தனர்.. தகவலறிந்த ஊமங்கலம் போலீசார் சமாதானம் செய்தனர்.. சூர்யா மன்னிப்பு கேட்கா விட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர் மக்கள்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

போராட்டம்
ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் வன்னியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இன்னும் அடங்காத நிலையில், இப்போது கிராம மக்கள் போராட்டத்தில் களமிறிங்கியுள்ளது சூர்யா தரப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, படம் வந்து இத்தனை நாள் ஆகியும் இதுகுறித்து யாருமே பேசப்படாத நிலையில், கிராம மக்கள் திடீரென இன்று குற்றஞ்சாட்டி போராட்டம் செய்ய என்ன காரணம்? இது யாருடைய தூண்டுதல்? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications