சென்னை வானில் நெருப்பு பிழம்பு! சட்டென பறந்த பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்! வெறும் கண்ணில் பார்த்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதித்யா எல்1 விண்கலத்தை தாங்கி சென்ற பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் இன்று காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், சென்னை வானில் ராக்கெட் பயணித்ததை மக்கள் வெறும் கண்களில் பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல ராக்கெட் பயணித்த வழிநெடுக வெள்ளை கோடு தெரிந்திருக்கிறது.

சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

The people of Chennai have watched and enjoyed the PSLV C57 rocket flight

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளிவரும் காந்த புயல்தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான்.

பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. அங்கு அனைத்து விதமான சோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அதை PSLV-C57 ராக்கெட்டுடன் விஞ்ஞானிகள் பொருத்தினார்கள். இதனையடுத்து நேற்று காலை இதை விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 11.50 மணியளவில் இது விண்ணில் ஏவப்பட்டது.

சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து இந்த ஆதித்யா எல்1 விண்கலம் ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. இதில் பூமியின் ஈர்ப்பு விசை சில லட்சம் கி.மீ வரை இருக்கும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு விசை சில கோடி கி.மீ வரை அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட்'. இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 5 புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புள்ளியில் எந்த பொருளை கொண்டு சென்று நிறுத்தினாலும் அது நிலையாக ஒரே இடத்தில் நிற்கும்.

இன்று ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேபோல ஸ்ரீஹரிகோட்டாவில் ஆதித்யாவை தாங்கி சென்ற ராக்கெட் ஏவப்பட்டாலும், சென்னையிலிருந்து அதை வெறும் கண்களால் பார்க்க முடிந்திருக்கிறது. இதற்காக மக்கள் மாடிகளில் காத்துக்கொண்டிருந்தனர். எதிர்பார்த்தபடி ராக்கெட் நெருப்பையும், புகையையும் கக்கிக்கொண்டு வானில் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றிருக்கிறது.

ராக்கெட் பயணித்த வழி நெடுக வெள்ளை நிறத்தில் புகை தேங்கி நின்றிருக்கிறது. ஏற்கெனவே இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்கலாம் என்று இஸ்ரோ அறிவித்து அதற்காக டிக்கெட்டுகளையும் விற்பனை செய்தது. ஆனால் இப்படி விற்பனை செய்யப்பட்ட 10,000 டிக்கெட்டுகளும் வெறும் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இப்படி இருக்கையில் சென்னை வானில் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் சீறி பாய்ந்து தெளிவாக காட்சியளித்த சம்பவம் டிக்கெட் கிடைக்காமல் தவித்தவர்களுக்கும், சென்னை மக்களுக்கும் ஆசுவாசத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+