அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி
சென்னை: அண்ணாமலை இன்று தன்னுடைய முடிவை அறிவிக்க போவதாக அறிவித்திருந்தார்.. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு, தனி கட்சியை துவங்க போவதாக அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. வரப்போகும் பொதுத்தேர்தலில் தன்னுடைய அரசியல் இயக்கம் போட்டியிடும் என்றும் அதற்கான பணிகளை இப்போதே துவங்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் எத்தனையோ திருப்பங்கள், அதிரடிகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த அரசியல் திசையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அண்ணாமலை, இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்களில் நேரலையில் உரையாடப் போவதாக அறிவித்திருந்தார்..
இந்த ஒரு அறிவிப்புதான் இப்போது டெல்லி முதல் சென்னை வரை பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
பாஜக தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அண்ணாமலையின் அரசியல் பாணி முற்றிலும் வேறாக இருந்தது. ஆனால், சமீபகாலமாக கட்சிக்குள்ளேயே அவருக்குப் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகத் தகவல்கள் கசிந்தன.

அண்ணாமலை புது கட்சி?
குறிப்பாக, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்படும் எனப் பலமுறை இழுத்தடிக்கப்பட்டதே அவரது இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். தன் மீதான சங்கடங்களை விவரிக்கவும், தனக்கு வழங்கப்பட்ட 'இசட்' பிரிவு பாதுகாப்பைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் அண்ணாமலை நேராக டெல்லிக்குச் சென்று நிதின் நவீன், அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
விஷயம் சீரியஸாவதை உணர்ந்த பாஜக மேலிடம், அவரை சமாதானப்படுத்த முயன்றது. தமிழகத்திலும் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அண்ணாமலையுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
அண்ணாமலை பாஜகவை விட்டு விலகுகிறார் என்ற செய்தி பரவியதும், தமிழகத்தில் உள்ள அவரது ஆதரவு மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் துணிந்தனர். இந்த ஆபத்தை உணர்ந்த அமித் ஷா, மீண்டும் அண்ணாமலையை அழைத்து, "நீங்கள் தனி இயக்கம் தொடங்கினாலும் சரி, பாஜக நிர்வாகிகளை மட்டும் உங்கள் பக்கம் இழுக்கக் கூடாது" என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டாராம்.
புதிய கட்சி ஆரம்பம்
இதனிடையே, "தமிழகத்தில் புதிதாக ஒரு கட்சி வரப்போகிறது" என 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அது அண்ணாமலையைக் குறிவைத்து போடப்பட்டதுதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமானது.
கரூரைச் சேர்ந்த ஒரு நபர், தேர்தல் ஆணையத்தில் "தமிழக மக்கள் கழகம்" அல்லது "தமிழக மக்கள் கட்சி" என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும், இந்தக் கட்சியைத்தான் அண்ணாமலை கையில் எடுக்கப் போகிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அண்ணாமலை புதிய இயக்கம்
இந்நிலையில், ஆன்லைனில் தோன்றி பேசிய அண்ணாமலை, ஆனந்தமாக புதிய அரசியல் இயக்கத்தை துவங்க போவதாக அறிவித்துள்ளார்.. இந்த அரசியல் இயக்கம், கட்சியாக உருவெடுக்கும் என்றும், தமிழகத்தில் அடுத்து நடக்கக்கூடிய பொதுத்தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டின் அடையாளத்தை இந்த 6 வருடங்களில் எங்கும் விட்டுத் தந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, தகுதிவாய்ந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். நான் யாருக்கும் போட்டி இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
நிரந்தர எம்பி, எம்எல்ஏ என்ற முறையை முறியடிக்க வேண்டும் என்று வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ள அண்ணாமலை, சமசரம் இல்லாத கொள்கை கொண்ட இயக்கமாக தன்னுடைய இயக்கம் உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications