சுனாமியையே தாங்கும்.. ஆட்டோமேட்டிக் சென்சார் கதவுகள்.. மெரினாவில் கட்டப்படும் மெட்ரோ.. என்ன சிறப்பு?
சென்னை: சென்னை மெரினாவில் கட்டப்பட உள்ள மெட்ரோ சுனாமியை தாங்கும் விதமாகவும், சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் கொண்ட மெட்ரோவாகவும் இருக்கும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

மெரினாவில் கூட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி மெரினாவில் தற்போது காந்தி சிலைக்கு இரண்டு பக்கமும் 450 மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனிமேல் கலங்கரை விளக்கத்தில் இருந்து போர் நினைவு சின்னத்திற்கு மெரினா இணைப்பு சாலையில் பயணம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக காமராஜர் சாலையில்தான் செல்ல வேண்டும்.
அதேபோல் எதிர் பக்கம் போர் நினைவு சின்னத்தில் இருந்து கலங்கரை விளக்கத்திற்கு செல்ல காமராஜர் சாலையில் மட்டுமே செல்ல வேண்டும். மெரினா இணைப்பு சாலையில் செல்ல முடியாது. இரண்டு பக்கமும் செல்பவர்கள் காந்தி சிலையில் பணிகள் நடக்கும் இடம் வரை செல்ல முடியும். அதை தாண்டி மெரினா இணைப்பு சாலையில் செல்ல முடியாது.
அடுத்த 1 வருடத்திற்கு இந்த மாற்றம் பொருந்தும். மெட்ரோ காரணமாக சென்னையில் மக்கள் பயணம் செய்யும் முறை அடியோடு மாறி உள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
சுனாமி: சென்னை மெரினாவில் கட்டப்பட உள்ள மெட்ரோ சுனாமியை தாங்கும் விதமாகவும், சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் கொண்ட மெட்ரோவாகவும் இருக்கும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள லைட்ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் சுனாமியை எதிர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக சுனாமியின் போது கடல் மட்டம் உயரும் போது, நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை மூடக்கூடிய தானியங்கி வெள்ள கதவுகள் இதில் அமைக்கப்பட உள்ளது.
இதனால் சுனாமி வந்தால் உள்ளே இருக்கும் மெட்ரோ நீரில் மூழ்காது. சர்வதேச தரத்தில் இந்த மெட்ரோ கட்டப்பட உள்ளது.
மெட்ரோ விரிவாக்கம்: முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது












Click it and Unblock the Notifications