தேனி : திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த 7 அதிமுக கவுன்சிலர்கள் நீக்கம் - ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி
சின்னமனூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் 7 பேர் திமுக வேட்பாளருக்குஆதரவாக வாக்களித்தது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை: திமுக நகர்மன்ற தலைவர் பதவி போட்டியில் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் திமுகவிற்கு வாக்களித்ததால் நகரசெயலாளர் உட்பட 7 பேரையும் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். இவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது. இதில் 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சி தலைமை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினரான செண்பகம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார். முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் சின்னமனூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் 7 பேர் திமுக வேட்பாளருக்குஆதரவாக வாக்களித்தது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
நகர்மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததால் சின்னமனூர் 10வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ஜெகதீஸ் , 13வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் உமாராணி , 14வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் கவிதா ராணி , 18-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் பிச்சை , 22வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் செல்வி , 26வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் தவசி , சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு












Click it and Unblock the Notifications