ஒர்க் அவுட் ஆயிடுச்சு.. இனி ரவீந்திரநாத்துக்கு "அந்த" செய்தி சீக்கிரமே வந்துரும்.. குஷியில் அதிமுக
ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது
சென்னை எந்த நேரத்தில் எம்.பி. ரவீந்திரநாத் பெயரை மாற்றினாரோ, அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருவதாக கூறப்படுகிறது.. ஆம்.. விரைவில் ஓபிஆருக்கு மந்திரி பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ் வழியில் சென்ட்டிமென்ட்டாக தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் இவருக்கு கடவுள் பக்தி அதிகம்.. சென்ட்டிமென்ட்டும் அதிகம்.. அந்த வகையில், தான் தன் பெயரை சில தினங்களுக்கு முன்பு "ப.ரவீந்திரநாத்" என்று மாற்றி கொண்டார். அதாவது இதுநாள் வரை பின்னாடி ஒட்டிக் கொண்டிருந்த "குமார்" இப்போது கட் ஆகிவிட்டது.

அமைச்சர் பதவி
கடந்த 2019, மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்றதுமே தேனியில் ஒரு பேட்டியை தந்தார் ஓபிஆர்.. அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை என்று சொல்லி இருந்தார்.. இவர் அப்படி சொன்னாலும், ஆரம்பம் முதலே இவருக்கு அமைச்சர் பதவி மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.

மக்களவை
அதற்காகவே பாஜகவுடன் இணக்கமான போக்கை ஓபிஎஸ்-ம் இவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.. ஒருகட்டத்தில், ஓபிஆர் மக்களவையில் பேசுவதை பார்க்கும்போது, இவர் பாஜகவா? அதிமுகவா? என்று கேட்கும் அளவுக்கு பாஜக தரப்பில் நெருக்கம் காட்டி வருபவர். ஆனாலும், பாஜக அவ்வளவு சீக்கிரம் மந்திரி பதவியை எடுத்து தந்துவிடவில்லை.

எடப்பாடியார்
அதேசமயம், அதிமுகவில் பல மூத்த தலைவர்கள் இருக்கும் போது புதிதாக வந்த ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தந்தால், கட்சியில் பல சர்ச்சைகள் ஏற்படும் என்று முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியாரிடம் தெரிவித்து வந்தனர்.. ஆந்த வகையில், மூத்த தலைவர் வைத்திலிங்கத்துக்கு பொறுப்பு தரலாம் என்றும் சலசலக்கப்பட்டது.. அதிமுக - பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓபிஆர் இருக்கும்போது, வைத்திலிங்கத்துக்கு மட்டும் எப்படி தருவது என்ற குழப்பம் அப்போது ஏற்பட்டது.

சுற்றுப்புயணம்
இதற்கெல்லாம் தற்போது முடிவு எட்டப்படும் என்றே தெரிகிறது.. விரைவில் ஓபி ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்கிறார்கள். இதற்கு முதல்வர் எடப்பாடியாரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.. முதல்வர் வேட்பாளர் அறிவித்தபிறகு, வருகிற 15-ம் தேதி முதல் எடப்பாடியார் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 15-ம் தேதிக்கு பிறகு, மத்திய அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்படுகிறது... அதில், ரவீந்திரநாத் அமைச்சராக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஓபிஆர்
எப்படியோ எப்படியோ அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் பாஜக, இப்படி ஒரு பொறுப்பை ஓபிஆருக்கு தருவதால், நிச்சயம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறது.. அதேசமயம், ஓபிஆருக்கு மந்திரி பதவி தருவதால், தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று முதல்வர் சொல்லிவிட்டாராம்.

அமைச்சர் பதவி?
இதற்கு காரணம், தன்னை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அங்கீகரித்ததுதான்.. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஓபிஎஸ் வீட்டுக்கு முதல்வர் சென்றபோது, அவரை வரவேற்றது ஓபிஆர்தான்.. சால்வை வழங்கி காலில் விழுந்து ஆசியும் பெற்றிருக்கிறார். எனவே, ஓபிஆர் அமைச்சர் ஆவதில் எடப்பாடியாருக்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகிறது.. அமைச்சர் பதவியை ரவீந்திரநாத் பெற்றுவிட்டால், அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications