இந்த கைக்கடிகாரத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 10 செகண்டில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்தான்! முடியுமா
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது. அது என்ன தவறு என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். நூற்றில் ஒருவர் மட்டுமே இதற்கான விடையை சரியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன. கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் அமைந்து இருப்பதால் தங்கள் அறிவுக்கூர்மையை சோதிக்கும் வகையில் இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் இந்த இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்கிறார்கள்.

விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் அதை பகிர்வதை காண முடிகிறது. விடையை நான் சரியாக கண்டுபிடித்துவிட்டேன்.. உன்னால் கண்டுபிடிக்க முடியுமா ? என தங்கள் நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கும் பகிர்ந்து சவால் அளிப்பதை காண முடிகிறது. இதனால் இந்த இல்யூஷன் படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே புதிர் படங்களும் மூளைக்கு வேலை வைப்பவை.. ஒய்வு நேரத்தில் செஸ் விளையாடுவது எப்படியோ கிட்டதட்ட அதைப்போல இந்த புதிர் படங்களும் ஒருவரின் அறிவுக்கூர்மை விரைந்து செயல்படும் திறன் ஆகியவற்றை சோதித்து பார்த்துவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இல்யூஷன் புதிர் படங்களை பொறுத்தவரை பெரும்பாலும் கணக்கு புதிர்கள், ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் கோணத்தை வைத்து விடையை கண்டுபிடிக்கும் வகையில் அமைந்து இருக்கும். இதனால் இத்தகைய புதிர் படங்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு கடிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கிறது. அது என்ன மிஸ்டேக் என்பதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க். அதுவும் 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். கடிகாரத்தை பார்த்தவுடன் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் இருக்கிறது. இதில் ஒன்றும் தவறு இல்லையே என பார்த்த உடன் தோன்றலாம்.

ஆனால் இன்னும் கொஞ்சம் படத்தை ஆழமாக பாருங்கள். இதில் உள்ள தவறு உங்கள் கண்ணுக்கு எளிதில் கிட்டும். கடிகாரத்தின் முட்கள், எண்கள் என அனைத்தையும் பார்த்து 10 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான நேரம் முடிந்தது. பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்.
இன்னமும் விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு கூடுதலாக ஐந்து நிமிடம் டைம்.. இப்போது முயற்சித்து பாருங்கள்.. விடையை கண்டுபிடித்துவிட்டேன் என பலரும் மனதுக்குள் புரிகிறது. இன்னும் ஒன்னுமே புரியலங்க... விடையை வட்டமிட்டு கீழே காட்டியுள்ளோம்.












Click it and Unblock the Notifications