Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக வங்கி கணக்குகளில் குளறுபடி..? ஓபிஎஸ் எடுத்த முக்கிய அஸ்திரம்! “சஸ்பென்ஸ் இருக்கு”.. ஆஹா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தவறாகப் பயன்படுத்துவதாக தகவல் வந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், இது தொடர்பாக ஒரு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கட்சியின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக அடுத்தகட்ட ஆக்‌ஷனை ஓபிஎஸ் டீம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சீறிய ஓ.பன்னீர்செல்வம், வழக்கத்திற்கு மாறாக ஒருமையிலும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு ஆவேசம் காட்டிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தரப்பினர், அதிமுக கட்சி நிதியை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓபிஎஸ்ஸால் தங்களுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சி நிதியை வேறு கணக்கில் மாற்றி இருக்கலாம் என்றும், அது பற்றி அறிந்ததாலேயே ஓபிஎஸ், அதைக் கையில் எடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மா.செக்கள் ஆலோசனை

மா.செக்கள் ஆலோசனை

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கோஷ்டி மோதல் நீடித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் நியமித்த 88 மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சவால் விட்ட ஓபிஎஸ்

சவால் விட்ட ஓபிஎஸ்

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது என்றும் அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என்றும் எங்களது உயிரே போனாலும் அதிமுக சட்ட விதிகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா என்றும் ஓபிஎஸ் சவால் விடுத்தார்.

13 வருடங்களாக வரவு செலவு

13 வருடங்களாக வரவு செலவு


மேலும், "நான் 13 வருடங்களாக அதிமுகவின் வரவு செலவு கணக்குகளைப் பார்த்திருக்கிறேன். அம்மா என்னைப் பெருமையோடு பார்ப்பார். நான் பொறுப்பேற்ற அடுத்த வருடம், "எனக்கு ஒரு 2 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நான் கழக கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டு அடுத்த வருடம் வைத்துவிடுகிறேன்" என்றார். சொல்லி வைத்தது போல் இரண்டே வருடத்தில் கொடுத்துவிட்டார். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் 256 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் வட்டியை வைத்து கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சீனிவாசன் - வங்கி கணக்கு

சீனிவாசன் - வங்கி கணக்கு

இவ்வளவு பணத்தை யார் தந்தது? யாரிடமும் போய் நாம் வசூல் செய்யவில்லை. எல்லாம் தொண்டர்களின் உழைப்பு. எனக்கு இப்போது ஒரு கவலை இருக்கிறது. வங்கி செக்கில் இப்போது திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட கணக்குகள் வைத்திருப்பதாக எனக்கு தகவல் வருகிறது. ஆனால் அவர்கள் வங்கிக் கணக்கை முறையாகக் கையாளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த கட்சிக்குச் சிறு பங்கம் வந்தாலும், அதை எதிர்த்து முதல் நாளாகக் குரல் கொடுப்பேன்." என்றார்.

சஸ்பென்ஸ் இருக்கு

சஸ்பென்ஸ் இருக்கு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், "அதிமுக கட்சி நிதி அவர்களால் கையாடல் செய்யப்பட்டதா, முறைகேடு எனத் தகவல் வந்ததா எனக் கேட்கப்படுகிறது. அதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், வெளியே வரும்" எனத் தெரிவித்தார் ஓபிஎஸ். இதன் மூலம், அதிமுக நிதி தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கைக்க்கு தயாராகி விட்டதாகவே தெரிகிறது. புதிதாக அதிமுக சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாக ஏதோ ஒரு தகவல் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் தான் இவ்வாறு பேசியுள்ளார் என்கிறார்கள் அதிமுகவினர்.

அதிமுக வங்கி கணக்குகள்

அதிமுக வங்கி கணக்குகள்

ஜூலை 11 பொதுக்குழுவில் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஈபிஎஸ் தரப்பில், வங்கி கணக்குகளை சீனிவாசன் கையாள்வார் என கடிதம் அனுப்பப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு, "என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளர். கட்சி விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தது செல்லாது, எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்" என கடிதம் அனுப்பினார். ஆனால், ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த வங்கிகள், ஈபிஎஸ் கடிதத்தை ஏற்று, திண்டுக்கல் சீனிவாசனை காசோலைகளில் கையெழுத்திட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+