வடியாத மழை நீர்.. அழுகும் நெற்பயிர்கள்.. நாகை விவசாயிகள் கண்ணீர்
சென்னை: நாகையில் மூன்றாவது நாளாக மழைநீர் வடியவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றாதது தான் மழை நீர் வடியாததற்கு காரணம் என்று கூறி, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ராவிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம் தலைவர் அப்துல் மிஸ்ரா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் சம்பா பயிர்களை பார்வையிட்ட அவர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

விவசாயிகள் கண்ணீர்
அப்போது கன மழை பெய்து மூன்று நாட்களாகியும் வயல்வெளிகள் மழைநீர் வடியாததற்கு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாதது தான் காரணம் என விவசாயிகள் வேதனையுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் மூழ்கிய பயிர்களை எடுத்து அழுகிசேதமடைந்து இருப்பதை கண்ணீர் மல்க காண்பித்தனர்.

கணக்கெடுக்கப்படும்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் வடிவதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருவதாகவும், மழை வெள்ள சேதங்கள் குறித்து விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் ஓரிரு நாட்கள் கழிந்த பின்னரே பயிர் சேதம் குறித்து தெரியவரும் பயிர் சேதம் குறித்த விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின்போது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மீட்பு படையினர்
இதனிடையே, அரக்கோணத்திலிருந்து 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கமாண்டர் பிகே சர்மா தலைமையில் நாகை வந்து சேர்ந்துள்ளனர். மிக கனமழை காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

குளம் போல
நாகை மாவட்டம் திருக்குவளை பகுதியில் பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கி குளம்போல் உள்ளது. அங்குமட்டுமல்ல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications