சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இரு சர்வாதிகாரிகள்தான் இருந்தனர்... ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மொத்தம் இரு சர்வாதிகாரிகள்தான் இருந்தனர் என்று, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

There were only 2 insecure dictators in the history of India: Amit Shah

நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்கும் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டிவிட்டில், 2014 மே மாதம் முதல் இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நிலவுகிறது. கடந்த இரு மாதங்களில் மோடி அரசு அனைத்து எல்லைகளையும் கடந்து விட்டது. கம்ப்யூட்டரை கூட கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை நசுக்குவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும், என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டில், இந்தியாவை காவல்துறை கட்டுப்பாட்டு நாடாக மாற்றுவது உங்கள் பிரச்சனைகளை தீர்க்காது மோடி. நீங்கள் ஒரு பாதுகாப்பு உணர்வற்ற சர்வாதிகாரி என்பதைத்தான் ஒரு பில்லியன் இந்திய மக்களுக்கும் உணர்கிறீர்கள். இவ்வாறு டுவிட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடியாக அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்திய வரலாற்றில் இரண்டு பாதுகாப்பற்ற சர்வாதிகாரிகள் தான் இருந்தார்கள். அதில் ஒருவர், அவசர நிலையை பிரகடனம் செய்தார். மற்றொருவர் சாமானிய மக்களின் கடிதங்கள் அனைத்தையும் வாசித்து பார்க்க விருப்பப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி அறிமுகம் செய்ததாக இந்திரா காந்தியையும், மக்கள் அனுப்பும் கடிதங்களை அரசு பிரித்துப் பார்த்து வாசித்து அறிந்து கொள்ளும் சட்டத்தை கொண்டுவர ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது விரும்பியதாக வெளியான தகவலை குறிப்பிட்டு அவரையும்தான், அமித்ஷா, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
"There were only 2 insecure dictators in the history of India. One imposed emergency and the other wanted unrestricted access to read letters of common citizens. Guess who were they RahulGandhi" Asks Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X