அச்சச்சோ திருமாவளவனா இது? பதவி ஆசையா? திமுக கிட்டதான் வரணும்.. அடியாழத்திற்கே போய் அலசிய ராஜகம்பீரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவன், வைகோ போன்றோர் என்னதான் பேசினாலும், உண்மை என்று ஒன்று உள்ளது.. அது என்ன தெரியுமா? திமுக கூட்டணியின் வாக்கு வங்கியில்தான் வெற்றி பெற்றுதான், இவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.. ஷாஜகான் எம்எல்ஏவானது, திமுக வாக்கு வங்கியில்தானே? வன்னியரசு இதற்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்திருக்கிறாரே? கடந்த இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது" என்று அரசியல் விமர்சகரும், மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன் கருத்து தெரிவித்துள்ளார்.

News focus Tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "திமுக முந்தைய காலங்களில் பாஜகவுடன் இணக்கமாக இருந்தது என்ற பழைய செய்திகளை எடுத்துப் பேசி, திருமாவளவன் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். திமுக கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி, பாஜக எதிர்ப்பில் உறுதியானது என்றெல்லாம் பேசிய திருமாவளவன், கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து முரண்பாடாக பேசி வருகிறார்.

Thirumavalavan

விஜயகாந்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது சரி என முன்பு சொன்னவர், இப்போது வாக்கு வங்கி குறைந்த பிறகு 10 தொகுதிகளா என மாற்றிப் பேசுவது அவரது முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைக் காட்டுகிறது. வைகோவின் இடத்தைப் பிடிப்பதற்குத் திருமாவளவன் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.

வைகோ, திருமாவளவன்

புதிய கூட்டணியில் தனது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. திருமா, அன்று பேசியதற்கும் இன்று பேசுவதற்கும் உள்ள முரண்பாடுகளை மக்கள் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துவிடுவார்கள்.

சனாதன எதிர்ப்பு மற்றும் கொள்கை அரசியலில் முதன்மையானவராக திகழ்பவர் திருமாவளவன்.. அப்படியிருக்கும்போது, இப்போதைய பதவி மற்றும் அதிகாரப் பகிர்வுக்காக தனது நீண்டகால அரசியல் பிம்பத்தை அவர் இழந்துவிடக் கூடாது.

மதிமுகவை நடத்த முடியாது

இதேபோல மதிமுகவும் திமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. மதிமுகவை நடத்த முடியாது, என் காலம் வரை இருக்கட்டும், அதற்கு பிறகு அந்த கட்சியை திமுகவில் இணைத்துவிடலாம் என்று வைகோ சொன்னதாகவே, அந்த கட்சிக்காரர்கள் சொல்கிறார்களாம்.. இப்போது தவெகவுடன் கூட்டணி அமைந்துவிட்டதால், யார் அதிகமாகக் கூவுவது என்பதில் விசிகவிற்கும் மதிமுகவிற்கும் இடையே ஒரு போட்டியே நடக்கிறது.

என்னதான் இவர்கள் பேசினாலும், உண்மை என்று ஒன்று உள்ளது.. அது என்ன தெரியுமா? திமுக கூட்டணியின் வாக்கு வங்கியில்தான் வெற்றி பெற்றுதான், இவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.. ஷாஜகான் எம்எல்ஏவானது, திமுக வாக்கு வங்கியில்தானே? வன்னியரசு இதற்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்திருக்கிறாரே? கடந்த இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

சீட்டுக்கட்டு கோபுரம்

கடந்த கால அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு சென்றிருக்கிறார்களே தவிர, அவர்களின் பாதை என்பது சரியானது என்பதை ஒருபோதும் நிரூபிக்க முடியாது.. என்னதான் உயர்த்தி பேசினாலும், இது சீட்டுக்கட்டு கோபுரம்.. கண்டிப்பாக ஒருநாள் சரிந்துவிடும்.. விசிக, மதிமுக போன்ற கட்சிகள் இறுதியில் திமுகவிடம் தான் திரும்ப வந்து நிற்க வேண்டும்.. எனவே, பின்னாளில் திரும்பி வருவதற்கான வழியை அடைத்துவிடும் அளவுக்கு எல்லையை மீறி விமர்சனம் செய்யக் கூடாது.

தவெகவை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் அரசியல் முகங்களாக அறியப்பட்டவர்களை ஒரு பிராண்ட் வேல்யூ மாதிரிதான் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, அந்த கொள்கையை அல்லது கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டவராக ஒருநாளும் விஜய் இருந்தது கிடையாது " என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+