விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது மனநிறைவு அளிப்பதாக கூறிய திருமாவளவன், 8 தொகுதியிலும் பானை சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகளில் விசிக போட்டியிட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த தேர்தலில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது.

Thirumavalavan

இதன்பின் லோக்சபா தேர்தலில் பானை சின்னத்தில் 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இதனால் இம்முறை விசிகவுக்கு கூடுதலாக 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய திமுக ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தொகுதி பங்கீட்டிற்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விசிகவின் கோரிக்கைகளை திமுகவிடம் வலியுறுத்தினோம்.

23 கட்சிகள் இடம்பெற்றுள்ள மெகா கூட்டணி இது.. 7 முதல் 8 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுக்கோப்பாக இயங்கி வரும் கூட்டணி.. மதவெறி சக்திகள், சாதிவெறி சக்திகள், வலதுசாரிகள் வளர்வதை தடுக்க வேண்டும், மக்களை பாதுகாக்க வேண்டும் என்று உறுதியேற்று செயல்படும் கூட்டணி இது.. விசிக நலன் மற்றும் கூட்டணி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த முடிவுக்கு உடன்பட்டுள்ளோம்.

திமுகவுடன் தொடர்ந்து பயணிப்பதற்கு முதன்மையான காரணம் இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் தான். வலதுசாரி அரசியல் காலூன்றிட கூடாது என்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். தற்காலிக லாபம் என்ன என்று கணக்கு போட்டு வலதுசாரிகள் வலுப்பெற இடம் கொடுத்தால், இங்கு சாதிவெறியர்கள் கொட்டம் அடிப்பார்கள்.

1 அல்லது 2 தொகுதிகளுக்காக முரண்பட்டு கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி வெற்றிக்கான வாய்ப்புகளை சேதப்படுத்திவிடக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம். இந்த முடிவில் மன நிறைவு உள்ளது. விருப்ப பட்டியலை திமுக தரப்பிடம் கொடுத்துள்ளோம். அது அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும். விசிக சிதைக்கப்படும் அளவிற்கு பலவீனமான கட்சி கிடையாது.

நாளுக்கு நாள் விசிக வலுப்பெற்று வருகிறது. எங்கள் சுயநலத்தைவிட சமூக நலன், மாநில நலன்களை முன்னிறுத்தி பார்க்கிறோம். எங்களின் பலம், பலவீனம் நன்றாக தெரியும். எங்களுக்கு இவ்வளவு இடம் வேண்டும் என்று பிடிவாதம் காட்டவில்லை. திமுகவுக்கு இருக்கும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. எங்களை வீழ்த்த யாருக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. கடைசி நாள் வரை தொகுதி உடன்பாடு எடுக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? திமுக போட்டியிடக் கூடிய சில தொகுதிகளில் காங்கிரஸ் வேட்புமனுவை திரும்ப பெறுமா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் விசிக தோழர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து தனித்து நிற்கும் முடிவை எடுத்தோம்.

அதேபோல் ராஜ்ய சபா சீட் தொடர்பான கோரிக்கையை விசிக முன் வைத்தது. அதனை கேட்டுக் கொண்ட ஸ்டாலின், விசிக ராஜ்ய சபா சீட் கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. இப்போது 4 சீட்டுகளும் கொடுக்கப்பட்டுவிட்டன. 2028 ராஜ்ய சபா தேர்தல் வரும் போது பேசிக் கொள்ளலாம். இப்போது அதற்கான நேரம் அல்ல.. ஆனால் நிச்சயமாக 2028ல் விசிக கோரிக்கையை திமுக பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+