நாடாளுமன்றத் தேர்தலில் பானைச் சின்னத்தில் விசிக போட்டி? உதயசூரியன் NO! உறுதி காட்டும் திருமாவளவன்!
சென்னை: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானைச் சின்னத்தில் போட்டியிட இப்போதே ஆயத்தமாகிவிட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட முழுமையாக இல்லாததால் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தரபிலும் கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் அட்வான்ஸாக டிசம்பர் மாதமே இறுதி செய்யப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை மூன்று தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள். இதில் திருமாவளவன் மட்டும் பானைச் சின்னத்தில் போட்டியிட்டார். விசிகவின் மற்றொரு வேட்பாளரான ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் கூடுதலாக திருவள்ளூர் தொகுதியை எதிர்பார்க்கும் திருமாவளவன், உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்களை போட்டியிட வைக்காமல் பானைச் சின்னத்திலேயே போட்டியிட வைக்க விரும்புகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பானைச் சின்னத்தில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் விசிகவுக்கு கிடைத்திருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என கடந்த கால தேர்தல்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தல்களில் எல்லாம் விசிகவுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது. பானைச் சின்னத்தில் போட்டியிடத் தொடங்கிய பிறகு தான் வெற்றிக்காற்று விசிக பக்கம் வீசத் தொடங்கியது.
தேர்தல் ஆணையம் விசிகவுக்கு ஒதுக்கிய பானைச் சின்னம் ஓரளவு ஒர்க் அவுட் ஆகிவிட்டதால் அந்தச் சின்னத்தையே திருமாவளவன் தொடர்ந்து தக்க வைக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே விசிகவின் கூடுதல் தொகுதி எதிர்பார்ப்பு, தனிச்சின்னத்தில் போட்டி உள்ளிட்ட முடிவுக்கு திமுகவின் ரியாக்ஷன் இதற்கு என்னவாக இருக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications