முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்.... 20 ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுவிக்க கோரிக்கை
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக சிறை கைதிகளாக, ஆயுள் கைதிகளாக உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். SIRக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்தபின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு தமிழக அரசு சார்பில் கேளம்பாக்கம் அருகில் 36 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, கோரிக்கை ஏற்று தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இன்று நிலத்தை ஒதுக்கியதற்காக தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க புதிய இலங்கை அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை தமிழக முதலமைச்சரி முன்வைத்தோம், கடந்த வாரம் இலங்கை யாழ்பாணத்தில் பார்வையிட்ட போது போர் முடிந்தும் போர் பதற்ற நிலையிலேயே அந்த இடம் உள்ளது, ஈழத்தமிழர்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக சிறை கைதிகளாக, ஆயுள் கைதிகளாக உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம்.
எஸ். ஐ. ஆர் வேண்டாம் என 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், எஸ் ஐ ஆர் என்பது பாஜகவும், தேர்தல் ஆணையமும் நடத்துகிற கூட்டு சதி அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவும் செயல் திட்டமாகவு இதை வடிவமைத்துள்ளார்கள், இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் பழைய முறைப்படி SIR முறையை கொண்டு வரவேண்டும் " இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications