சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீ என்ன பண்ணுவ சொல்லுயா? வார்த்தையை விட்ட கங்கை அமரன்.. "சங்கி".. விளாசிய திருமாவளவன்.. காரசார மோதல்

Google Oneindia Tamil News

சென்னை: அம்பேத்காரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு விசிக எம்பி திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். கங்கை அமரன் கொடுத்த பேட்டி ஒன்றை பகிர்ந்து திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார்.

அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். இருவரும் ஒரே மாதிரியான தலைவர்கள் என்று இளையராஜா பாராட்டி இருந்தார். இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மோடியின் தொலைநோக்கு பார்வை.. அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டது தப்பில்ல - எஸ்.ஏ.சந்திரசேகர் மோடியின் தொலைநோக்கு பார்வை.. அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டது தப்பில்ல - எஸ்.ஏ.சந்திரசேகர்

விளக்கம்

விளக்கம்

பாஜக இந்த கருத்தை ஆதரித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

 கங்கை அமரன் பேட்டி

கங்கை அமரன் பேட்டி

இந்த நிலையில் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஐ தமிழ் என்ற செய்தி சேனலுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்தார். பாஜக உறுப்பினரான இவர், இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்று கூறுகிறார்கள். நான்தான் அப்படி எழுதிக்கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜாவுக்கு பதில் நான் இசை அமைத்தேன் என்பார்களா? ஆமா நான் தான் எழுதினேன்.. அந்த முன்னுரை நான் தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவ? இப்படி எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இல்லாத நாய்.. என்று கடுமையான விமர்சனம் செய்தார்.

பேட்டியில் சர்ச்சை

பேட்டியில் சர்ச்சை

அதோடு அம்பேத்கார் விருதை.. திருமாவளவன் என்ற அம்பேத்கார் வாங்கி.. ஸ்டாலின் என்ற அம்பேத்காருக்கு கொடுத்ததாக சொன்னார்களே.. அதை ஒப்புக்கொண்டாயா? அதை ஒப்புக்கொண்டாயா? சொல்லு.. சொல்லு என்று கோபமாக கத்தி பேசினார். கங்கை அமரன் இப்படி கோபமாக கத்தி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இணையத்தில் இவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு ஒப்பீடு

இரண்டு ஒப்பீடு


இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் இதற்கு பதில் அளித்துள்ளார் அதில், ஒப்பீடு செய்வதில் இருவகை உண்டு. 1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு

கரும்பு இனிக்கும் ;
கனிகள் இனிக்கும் -
இது நேர்மறை

எதிர்மறை ஒப்பீடு

கரும்பு இனிக்கும் ;
வேம்பு கசக்கும் -
இது எதிர்மறை

அம்பேத்கர் ; பெரியார் -
இது நேர்மறை.
அம்பேத்கர் ; மோடி-
இது எதிர்மறை.

அம்பேத்கரும் மோடியும்...

எதிர் எதிர் துருவங்கள்.

எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல்.

பாவலரின் சகோ'க்கள்
பரிவார்களின் பலிஆடுகளா? என்று திருமாவளவன் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பதிலடி

பதிலடி

முன்னதாக அம்பேத்கர் - மோடி இருவரை ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது குறித்து திருமாவளவன் விமர்சனம் செய்து இருந்தார். அதில், இளையராஜாவிற்கு என்ன நெருக்கடியோ இப்படி பேசி உள்ளார். அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட முடியுமா? மோடி சமத்துவத்திற்கு என்ன செய்தார்? சாதி ஒழிப்பிற்கு என்ன செய்தார்? அவர்கள் பெண்கள் முன்னேற என்ன செய்தார்? அவரை எப்படி அம்பேத்காருடன் ஒப்பிட முடியும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
VCK MP Thirumavalavan replies to Gangai Amaran statement on Modi and Ambedkar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X