திருமாவின் ஸ்பீடு.. திமுகவை ஓவர்டேக் செய்த விசிக.. லிஸ்ட் வெளியிட்டது.. சென்னையை தட்டி தூக்கியதா?

சென்னை அண்ணாநகர் வார்டு தொகுதியை கைப்பற்றியது விசிக கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக - திமுக கூட்டணி பங்கீடு இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை.. சில இடங்களில் இழுபறி நீடித்து வருகிறதாம்.. இதனிடையே, தங்களது வேட்பாளர் லிஸ்ட்டை திமுக இன்னும் வெளியிடாத நிலையில், கூட்டணியில் விசிக தன்னுடைய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக ராணிப்பேட்டை அமைந்துள்ளது..

அந்த வகையில், நடக்க போகும் தேர்தலில் ராணிப்பேட்டையின் வெற்றி மிக முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

 நகராட்சிகள்

நகராட்சிகள்

ராணிப்பேட்டை நகராட்சி 30 வார்டுகளைக் கொண்ட பழமையான நகராட்சியாகும்... இந்த நகராட்சியில் 19,623 ஆண்கள், 22,062 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 41,689 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 17 வார்டுகளில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். மேலும், வன்னியர், இஸ்லாமியர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது.. இந்த 17 வார்டுகளில் ஆதிதிராவிடர் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், விசிகவுக்கு இங்கு ஆதரவு அதிகமாக உள்ளது..

 வேட்பாளர் லிஸ்ட்

வேட்பாளர் லிஸ்ட்

ஏற்கெனவே விசிக தனித்து போட்டியிட்டு 2 வார்டுகளை இங்கு கைப்பற்றியுள்ள நிலையில, இந்த முறையும் அதிக இடங்களை கைப்பற்றும் என்று நம்பப்படுகிறது. திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில், ஒதுக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை முந்திக் கொண்டு வெளியிட்டுள்ளது... இன்னும் திமுகவே வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிடாத நிலையில், விசிக லிஸ்ட்டை வெளியிட்டு மாஸ் மாட்டி உள்ளது.

அறிக்கை

அறிக்கை

இதுகுறித்து அக்கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் தரப்பில் வெளியான அறிக்கையில் உள்ளதாவது: "தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கீழ்கண்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு வேட்பாளர்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

 இராணிப்பேட்டை நகராட்சி

இராணிப்பேட்டை நகராட்சி

9-வது வார்டு - தனி (பொது)
து.வேலு த/பெ துரை நெ.17/A பழைய திருத்தணி ரோடு
ஒட்டேரி, இராணிப்பேட்டை

10வது வார்டு - தனி (பொது)
சீ.ம.ரமேஷ்கர்ணா த/பெ மணி நெ. 27 காமராஜர் தெரு
சீனிவாசன் பேட்டை, இராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சி
4-வது வார்டு - தனி (பொது)
அ.அணு அருண்குமார் க/பெ அருண்குமார் நெ. 8/யு டவுன் தெரு, ஆற்காடு

23-வது வார்டு - தனி (பெண்கள்)
பா. காமாட்சி
க/பெ பாக்யராஜ், நெ.15,பெரிய தண்டுக்கார தெரு

அம்மூர் பேரூராட்சி
13-வது வார்டு தனி (பொது)
இரா.ஜெயவேலு
த/பெ ராமசாமி, நெ. 24, மேட்டுக் காலணி, அம்மூர்

திமிரி பேரூராட்சி
5-வது வார்டு தனி (பெண்கள்)
நா.ராதா க/பெ நாகராஜ், நெ.85, இராமபாளையம் ரோடு, திமிரி

கலவை பேரூராட்சி
12-வது வார்டு
தனி (பெண்கள்)
த.செல்லி க/பெ தட்சணாமூர்த்தி நெ.6/8 ஒத்தவாடை தெரு பள்ளக் காலணி, கலவை" என்று தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை

இந்நிலையில், தேமுதிக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் சார்பில் வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், விசிக சென்னையில் போட்டியிடும் இடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை அண்ணாநகர் தொகுதியில் உள்ள வார்டு எண் 107 முதல் இடமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம்.. இதே சென்னையில்தான் முக்கிய இடங்களை காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஆனால், அக்கட்சிக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், விசிக முக்கிய இடத்தை பெற போவது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அதேபோல இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுக்க தேர்தல் நடைபெறும் இடங்களில் எல்லாம், தங்களுக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சீட்களையே விசிக கேட்கிறதாம்.. ஆனால், அதற்கு திமுக தரப்பில் சிங்கிள் டிஜிட் மட்டுமே தர முடியும் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+