தேனி வேண்டாம்.. ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தை ஓகே செய்ய என்ன காரணம்! வெற்றி சாத்தியமா
சென்னை: லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முக்குலத்தோர் சமூக வாக்குகள் இங்கு கணிசமாக இருப்பதால், அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் சூலை பொறுத்த அளவில் பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்திருக்கிறார். இரட்டை இலக்காகவும், அதிமுக-கவும் அவர் மேற்கொண்டிருந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத நிலையில், இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவாரா? என்கிற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து பாஜகவிடம் 5 தொகுதிகள் கேட்டு தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவருக்கு தற்போது ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 5 தொகுதியில் போட்டியிட்டால் தாமரை சின்னத்தில்தாதன் நிற்க வேண்டும் என்று பாஜக கூறியிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் ஒரே தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். இப்படியாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். நானே அந்த களத்தில் நின்று என்னுடைய பலத்தை நிரூபிக்கவும், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவும் தனிச்சின்னத்தில் நிற்கிறோம். 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம் கிடைக்கவில்லை. பாஜகவில் உரிய அன்பும், அங்கீகாரமும் உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தொடக்கம் முதலே ஓபிஎஸ் வேலை பார்த்து வந்திருந்தார். ஏற்கெனவே அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் முக்குலத்தோர் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இவை அனைத்தும் தனக்கு கைகொடுக்கும் என்று அவர் கருதிதான் ராமநாதபுரத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சசிகலாவையும், டிடிவி தினகரனையும் கழற்றி விட்டது, ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கியது என எடப்பாடி மீது முக்குலத்தோர் சமுதாயத்தின் அதிருப்தி நீள்கிறது. அதிலும் குறிப்பாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்து தென் மாவட்டங்களில் உள்ள 60% சமூகங்களின் கோட்டாக்களை சுருக்கி விட்டார் என்கிற குற்றச்சாட்டும் இபிஎஸ் மீது இருக்கிறது. இதைதான் அறுவடை செய்ய ஓபிஎஸ் முயற்சிக்கிறார்.
தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருந்தார். இதுவே ராமநாதபுரத்தில் டிடிவி, ஓபிஎஸ்-க்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் முக்குலத்தோர் காங்கிரஸில் இருந்தார்கள் பின்னர் திமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் அணி திரண்டார்கள் சசிகலா, நடராஜனுக்காக ஒட்டுமொத்த முக்குலத்தோர் கம்யூனிட்டியும் ஜெயலலிதா பின்னாடி அணி திரண்டது. பின்னர் ஓபிஎஸ் வசம் சென்றது. தற்போது இந்த வாக்கு வங்கிதான் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு என ஓ.பன்னீர்செல்வம் கருதியுள்ளார். எனவேதான் தனது சொந்த ஊரான தேனியை தவிர்த்துவிட்டு ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!











Click it and Unblock the Notifications