Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு இதுவரை வாங்காதவர்களுக்கு ரூ.3000 வருமா? தமிழக அரசு சொல்ல போகும் ஆச்சரியம்! குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. இதுவரை பொங்கல் பரிசு பெறாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே கடந்த 14ம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. ஆனால் பலரும் இன்னமும் வாங்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முக்கிய தகவல் ஒன்று இதுகுறித்து அரசு தரப்பில் விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.

தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுகிறது... அந்தவகையில், இந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.3,000 ரொக்கத் தொகை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த உதவி மூலம் பொங்கல் பண்டிகைக்கான அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டோக்கன் முறை

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி மாத தொடக்கத்தில் டோக்கன் முறையில் ஆரம்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக் கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், முதல் நாளில் சுமார் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம் நாளில் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்

இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சில குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசை பெற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக வர இயலாதவர்கள் உள்ளிட்ட பலர் இன்னும் பரிசுத் தொகுப்பை பெறவில்லை என்ற தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்தன. இதனால், பொதுமக்களுக்கு இடர்பாடு ஏற்படாத வகையில் அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

அதன்படி, பொங்கல் பரிசு விநியோகத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது , ஜனவரி 13-ம் தேதியே பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுநாள் 14-ம் தேதியும் வழங்கப்படும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது..

இந்த முடிவு, கடைசி நேரத்தில் பரிசை பெற முடியாமல் தவித்த பல குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பரவலான வரவேற்பை பெற்றது.

விரைவில் ரூ.3000 பெறாதவர்களுக்கு குட் நியூஸ்

ஆனாலும் கூட, பலர் இன்னும் பொங்கல் பரிசை பெறாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலத்தில் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதால், இந்தப் பணி முழுமை பெறாமல் உள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பொங்கல் பரிசைப் பெற்றிருந்தாலும், மீதமுள்ளவர்களுக்கு இன்னும் வழங்க வேண்டிய நிலை உள்ளது.

அவர்கள் சொந்த ஊரிலிருந்து திரும்பியதும், நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு ஓரிரு நாள்களில் வெளியிட உள்ளது. மேலும், இந்த மாதம் இறுதிவரை ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+