ஒரே குடும்பத்தில் மூன்று விமானிகள்! வியக்க வைத்த அப்பா.. யார் இவர்கள்?
சென்னை: மகள்களின் தினத்தையொட்டி இரண்டு பெண்களைப் பற்றி இந்த உலகம் அறிந்துகொள்ள ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு எல்லாம் பேச்சு வழக்கில் 'எனக்கும் ஒரு நாள் வரும். அன்று உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று சவால் விடுவார்கள். அதைப் போன்று இப்போது எல்லாவற்றுக்கும் 'ஒரு நாள்' வந்துவிட்டது. மர்தஸ் டே, ஃபாதர்ஸ் டே, லவர்ஸ் டே எனத் தொடங்கி இப்போது 'மகள் தினம்' வரை பல நாட்கள் தனித்தனியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இப்படி ஒரு நாள் தேவையா? எனச் சிலர் இன்னும் மரபு வழி சிந்தனையிலிருந்து வெளியே வராமல் கேள்வி எழுப்புவதும் விமர்சனம் செய்வதையும் பார்க்க முடிகிறது. இப்படி ஒருநாள் இருந்தாலாவது வாழ்க்கை கொஞ்சம் போர் அடிக்காமல் போகுமே என்று சொல்பவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அப்படித்தான் கடந்த 22 ஆம் தேதி மகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளை ஒட்டி இரண்டு பெண்கள் இப்போது கவனத்திற்கு வந்துள்ளனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் சமூக ஊடகப்பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடங்கிய புகைப்படம் ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளது. அதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எங்கள் நிறுவனத்தில் பைலட் ஆக இருக்கிறார்கள் என்று உலகிற்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர். அப்பா விமானியாக இருக்கும் அதே நிறுவனத்தில் அவரது மகள்கள் இருவரும் விமானியாக பணிபுரிந்து வருகின்றனர். தனது இரண்டு மகள்களை ஒருநாளைக்கு ஆகாயத்தில் பறக்க வைப்பதே பலருக்கும் இன்னும் எட்டாதக் கனவாக இருக்கும்போது இவர் இரண்டு மகள்களை விமானியாகப் படிக்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்தப் பெண்கள் சீருடையில் விமானத்தின் டயரை கழற்றுவது, உதிரிப் பாகங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிப்பது எனப் பல வேலைகளை ஆண்களுக்கு இணையாகச் செய்கின்றனர். ஆகவே பலரையும் இந்தக் காட்சி ஈர்க்கும்படி இருக்கின்றது. இதற்கு ' ஒரு குடும்பம், மூன்று விமானிகள்' என்று தலைப்பைக் கொடுத்துள்ளனர்.
இந்தப் பெண்களின் இருவரின் செயல்பாட்டை உலகிற்குக் காட்டியதன் மூலம் ஒரு உத்வேகத்தை அதைப் பார்க்கும் பெற்றோருக்கு இவர்கள் அளித்துள்ளனர். இந்த பக்கத்தைக் கிட்டத்தட்ட 700கே பேர் பின் தொடர்கின்றன. எனவே அதைப் பலரும் பாராட்டி எழுதியுள்ளனர். ஒருவர் இது 'உத்வேகத்திற்கு அப்பாற்பட்டது. அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறது' என்று கூறியிருக்கிறார். மற்றொருவர் 'இந்த வலிமையான பெண்கள் விண்வெளியில் ஏறிப் பயணிப்பதைப் பார்க்கும்போது உண்மையாக மனம் மகிழ்கிறது' என்றும் கூறியுள்ளார்.
அது சரி, இந்த மகள்கள் தினத்திற்கான வரலாறு என்ன? இது எப்போது தொடங்கியது? எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்ற வரலாறு தெளிவாக இல்லை. தேசிய மகள்கள் தினம் பெண் பிள்ளைகளின் அன்பை உறுதி செய்வதற்காகவும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒரு நாள் இருந்ததால்தான் இப்போது இந்தப் பறக்கும் பறவைகளை இண்டிகோ வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. இல்லை எனில் இந்த வாய்ப்பு குறைவு.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications