Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழியர்கள் டூ அதிகாரி.. திருச்சி கலெக்டர் ஆபீசில் ஒன்றாக படித்து குரூப் 1-ல் பாஸ் ஆன 3 பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தாலும், கல்வி என்ற ஆயுதத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய 3 பெண் ஊழியர்கள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று சாதித்து காட்டியுள்ளனர்.

அரசு வேலை என்பது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். இந்த கனவுகளை போட்டித் தேர்வுகள் மூலம் நினைவாக்கி வருகின்றனர். குறிப்பாக, ஏழை எளிய மாணவர்கள் பலரும் இந்த போட்டித் தேர்வு மூலம் பல்வேறு உயர் நிலைகளை அடைந்துள்ளனர். அந்த வகையில், பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் உள்பட பலர் போட்டி தேர்வில் குறிப்பாக குரூப் 1 தேர்வில் கூட வெற்றி பெற்று சாதனை பெற்றுள்ளனர்.

Three women employees working in Tirupur Collectorate passed the Group 1 examination

அந்த வகையில் தமிழகத்தின் திருப்பூர் ஆட்சியர் அலுலகத்தில் பணியாற்றிய 3 பெண் ஊழியர்களும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். கல்வியால் மட்டுமே நாம் உயர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த 3 பெண்களும் சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் எப்படி இந்த தேர்வில் வெற்றி பெற்றனர் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஈரோடு நித்யா: ஈரோடு பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமியின் மகள் நித்யா. 26 வயதான இவர் பிஎஸ்சி வேளாண்மை படித்துள்ளார். குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற நித்யா கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அரசு வேலை கிடைத்துவிட்டது என அதோடு நின்று விடாமல் தொடர்ந்து படித்து வந்த நித்யா குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

சப் கலெக்டர், டிஎஸ்பி ஆகலாம்.. குரூப் 1 தேர்வு: டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்! தேதி முடிய போகுது


இதன் பின்னர் வேளாண்மை அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். தொடர்ந்து அதோடு விடாமல் குரூப் 1 தேர்விற்கும் படித்து வந்துள்ளார். கிடைத்த நேரத்தை வீண் செய்யாமல் வேலை பார்த்துக்கொண்டே படித்து தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆம் இடத்தை பிடித்துள்ளார். விரைவில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார் நித்யா.

3 பேரும் வெற்றி பெற்றிருக்கிறோம்: குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக நித்யா கூறுகையில், "குரூப் 1 தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 95 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 3 பேரும் வெற்றி பெற்றிருக்கிறோம். மூன்று பேருமே அரசு வேலையில் தான் இருக்கிறோம். எனினும் தொடர்ந்து படித்து தற்போது இந்த தேர்விலும் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.

49 ஆம் இடம்:
இதேபோல் ஈரோடு மாவட்டம் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த காளியப்பசாமியின் மகள் சுபாஷினியும் ( வயது 26 ) குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுபாஷினி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி அதற்காக இடைவிடாது படித்து வந்துள்ளார்.

குரூப் 2 தேர்வு முறையில் மேஜர் மாற்றம்.. போட்டி தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி


குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டில் 49 ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்று தற்போது அவர் பணிபுரிந்து வந்த கூட்டுறவுத் துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி இருக்கிறார். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சுபாஷினி கூறுகையில், "வேலைக்கு சென்று வந்த மீதி நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்பட சிலர் கொடுத்த ஊக்கம் எனக்கு உற்சாகத்தை தந்தது. என்னை பார்த்து என் தங்கையும் போட்டி தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்" என்று கூறினார்.

திருப்பூர் பிரியதர்ஷினி: இதேபோல், திருப்பூர் உடுமலையை சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினி என்ற 28 வயது இளம்பெண்ணும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை காலணி வியாபாரம் செய்து வருகிறார். பிரியதர்ஷினியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் பணியாற்றுகிறார். வேலைக்கு நடுவே படித்துக்கொண்டே தற்போது குரூப் 1 தேர்வில் 35 ஆம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணி செய்ய இருக்கிறார்.

எக்ஸாம் கிடையாது! சென்னை விமான நிலையத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி போதும்.. விண்ணப்பிக்க ரெடியா


பிரியதர்ஷினி கூறுகையில், “வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்கே அதிக நேரமாகும். எனினும் கிடைக்கும் நேரத்தில் தவறாமல் படித்து வந்தேன். தற்போது வெற்றி பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தாலும், கல்வி என்ற ஆயுதத்தால் தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+