33 ஆண்டுகள்- 3 முறை நியமனம்- 3 முறை டிஸ்மிஸ்-90 பேர் மரணம். துயரம் தோய்ந்த மக்கள் நலப் பணியாளர்கள்!
சென்னை: 33 ஆண்டுகளாக பந்தாடப்பட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்களின் எதிர்காலத்தில் ஒளியேற்றி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். 23 ஆண்டுகளில் 3 முறை பணி நியமனம் பெற்று; 3 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் துயரத்துக்கு விடிவு தரும் தீர்ப்பை தந்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாட்டில் 1989-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போது வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமன திட்டம். 02.07.1990-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தம் 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது மாத ஊதியம் ரூ750 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்றது அதிமுக. முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே 13-7-1991-ல் 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா.
1996-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அத்துடன் 10,000 சாலை பணியாளர்களுக்கும் திமுக அரசு வேலை வழங்கியது.
ஆனால் 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 2-வது முறையாக 13,000 மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். 1-6-2001-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால் பணியிழந்த 13, 247 மக்கள் நலப் பணியாளர்களிம் பாதி பேர் பெண்கள். திடீர் திடீரென ஜெயலலிதா அரசால் மக்கள் நலப் பணியாளர்கள் பந்தாடப்பட்டு வேலையைவிட்டு வெளியேற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மீண்டும் வேலை; 2011-ல் அதிமுக ஆட்சியில் மீண்டும் பணி பறிப்பு என பந்தாடப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் 1-6-2009 முதல் ரூ. 2500 - 5000 மற்றும் ரூ. 500 தர ஊதியம் என்ற அளவில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை காரணமாக 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் பயன் பெற்றனர். ஆனால் 2011-ல் ஜெயலலிதா முதல்வரான நிலையில் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 33 ஆண்டுகளில் 3 முறை மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்; 3 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த கோரவிளையாட்டில் உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டியது.
இதனை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு போன போதும் அதிமுக அரசு மனம் இரங்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளும் தட்டப்பட்டன. இந்த வழக்கில் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் உத்தரவாதத்தை பல முறை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியாக எழுப்பி உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்தே இன்று, ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர்களை மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிட்டு 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்!
-
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications