தமிழ்நாட்டிலேயே பணி.. அரசு மருத்துவமனையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்க..நல்ல வாய்ப்பு
சென்னை: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமைனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
லெஸ்பியன் உறவு! பெண் இன்ஜினியருடன் மாயமான தர்மபுரி கல்லூரி மாணவி.. கதிகலங்கிய காவல் நிலையம்

காலியிடம்-கல்வி தகுதி என்ன?
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புநர்-நிலை 2 (Lab Technician Grade II) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் DMLT (2 ஆண்டு) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 59 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 25ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் நேரில், தபால் அல்லது இமெயிலில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை தபால் வாயிலாக முதல்வர், மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி, திருப்பூர் 641-608 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை, ‛‛முதல்வர், அரசு மருத்துவக்கல்லூர, திருப்பூர் மாவட்டம் - 641 608'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும்போது ‛‛ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 தொகுப்பூதிய பணியிட விண்ணப்பம்'' என கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?
இ-மெயிலில் mesectiongmctpr@gamail.com மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் நேரில் செல்லும்போது Hard Copy கட்டாயம் வழங்க வேண்டும். கல்வி சான்று, அனுபவ வைத்திருக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

மாத சம்பளம் என்ன?
இந்த பணியிடம் தற்காலிகமானது தான். பணி நிரந்தரம் செய்யப்படாது. மாதம் சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here