படுக்கை அறை, பாத்ரூமில் டிரான்ஸ்பரன்ட் கண்ணாடி! திருப்பூர் ரிதன்யா கணவன் பற்றி தந்தை புகார் பட்டியல்
சென்னை: திருப்பூர் கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மகள் ரிதன்யா எடுத்த முடிவும், அவர் கடைசியாக வெளியிட்ட ஆடியோவும் சமூக வலைதளங்களில் பல நாட்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரிதன்யா வழக்கின் விசாரணையில் நடந்த வரும் விஷயங்கள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையால் அதிருப்தியில் உள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது விளக்கி உள்ளார்.
தனது மகள் வரதட்சணை கொடுமையால் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக குற்றம்சாடியுள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை (வயது 53), ரிதன்யா தனது கணவனால் எப்படியெல்லாம் அத்துமீறலுக்கு என்பது பற்றி தமிழக அரசிடம் அவரது தந்தை அண்ணாதுரை முழுமையான விளக்கத்தை எழுத்து மூலம் அளித்துள்ளார்.

300 சவரன் தங்கம்
நேற்று தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறுகையில், "எனது மகள் ரிதன்யாவை, ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியரின் மகன் கவினுக்கு கடந்த 11.4.2025 அன்று திருமணம் செய்து வைத்தேன். இந்த திருமணத்திற்காக 300 சவரன் தங்க நகை, ரூ.62 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவை சீதனமாக அளிக்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதல் தங்க நகை மற்றும் வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினார்கள்.
ரிதன்யாவின் கணவனின் செயல்
இதனால் கணவன் வீட்டில் இருந்து 25.6.2025 அன்று ரிதன்யா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் கவின் மற்றும் அவரது பெற்றோரும் எங்கள் வீட்டுக்கு வந்து, தங்கள் வீட்டுக்கு வாழ வரும்படி ரிதன்யாவை அழைத்தனர். ஆனால் அதற்கு ரிதன்யா மறுத்துவிட்டார். தாயார் தொடர்ந்து கேட்டதைத் தொடர்ந்து கணவன் வீட்டில் பட்ட கஷ்டங்கள் பற்றி ரிதன்யா கூறி அழுதார். அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்வது, இயற்கைக்கு மாறான உறவு மற்றும் தரக்குறைவான பாலியல் செயல்களுக்கு வற்புறுத்துவது என்று கணவன் செய்யும் பல்வேறு கொடுமைகளைப் பற்றி எங்களிடம் கூறினார்..
படுக்கை அறை மற்றும் குளியலறை
மேலும், படுக்கை அறையில் உள்ள குளியலறையில் அவள் குளிக்கும்போதுகூட தனிமையாக விடாமல், வெளியே தெரியும் வகையில் கண்ணாடிக் கதவின் மூலம் பார்த்திருக்கிறார். அந்தவகையில் சைக்கோத்தனமாக தனது இச்சைகளை தீர்ப்பதற்கு ரிதன்யாவை ஒரு ஜடப்பொருளாகவே கவின் பயன்படுத்தி உள்ளார். இதனால் ரிதன்யாவுக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.
எனக்கு வந்த அழைப்பு
இந்த நிலையில்தான் 28.6.2025 அன்று வழக்கமாக செல்லும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். பிற்பகலில் அவளது போன் எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், காருக்குள் உங்கள் மகள் மயக்க நிலையில், வாயில் நுரையுடன் விழுந்துகிடப்பதாகக் கூறினார்கள். பின்னர் அவள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவள் இறப்பதற்கு முன்பு தனது இறுதிப் பேச்சை பதிவு செய்து அனுப்பி இருந்தாள். அதில், தனக்கு கவின் மற்றும் அவரது பெற்றோர், மன மற்றும் உடல் ரீதியாக அளித்த துன்புறுத்தல்களை கூறியிருந்தார்.
செய்யூர் போலீஸ் வழக்கு
இதுதொடர்பாக கவின் மற்றும் அவரது பெற்றோர் மீது செய்யூர் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முதலில் ரிதன்யாவின் மரணம் சந்தேகத்திற்கு இடமான மரணமாக காட்டப்பட்டது. பின்னர் ஊடகங்களில் எனது மகளின் பேச்சுகள் வெளியான சூழ்நிலையில், அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என்று குற்றங்கள் சேர்க்கப்பட்டன. ஆனால் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை அதில் போலீசார் சேர்க்கவில்லை.
விசாரணை அதிகாரி ஒரு தலைபட்சம்
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டோருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒருதலைப்பட்சமாக ஆதாரங்களை கலைத்துள்ளார். இது எனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிடும். குற்றத்தை அம்பலப்படுத்தக்கூடிய கவினின் போனில் உள்ள தரவுகளை வேண்டுமென்றே தவிர்க்கின்றார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையும் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுகிறது. ரிதன்யா வேறு யாருடன் பேசினாள் என்பதற்கான பதிவுகளை பெற எந்த முயற்சியையும் எடுக்கவே இல்லை.
தனி விசாரணை அதிகாரி
ஆனால் எனது மகள் நிலையான மனநலன் இல்லாதவர் என்ற தவறான தகவல்களை போலீசும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை தற்போதுள்ள விசாரணை அதிகாரி நேர்மையாக விசாரிப்பாரா? என்பதில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கை, உள்ளூர் அரசியல் தொடர்பு இல்லாத தனி விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கை
பிரேத பரிசோதனை அறிக்கையை உடனே அளிப்பதுடன், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும் பெறப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்யவேண்டும். பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்யவேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற மனுவை டி.ஜி.பி. அலுவலகத்திலும் அண்ணாதுரை அளித்திருக்கிறார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications