சட்டசபை தேர்தல்: மநீம வேட்பாளராக போட்டியிட பிப் 21 முதல் ஆன்லைனில் விருப்ப மனு- ரூ25,000 கட்டணம்!
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக போட்டியிட பிப்ரவரி 21-ந் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விருப்ப மனுக்களை ரூ25,000 கட்டணத்துடன் ஆன்லைனில் தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரூ25,000 கட்டணத்துடன் www.maiam.com மூலமாக ஆன்லைனில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்தான் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதேபோல் கட்சியில் உறுப்பினர் அல்லாதவர்களும் தாங்கள் எம்.எல்.ஏ.வாக தகுதி இருப்பின் உரிய கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஒருவரே எத்தனை தொகுதிக்கு வேண்டுமானாலும் ஒரு தொகுதிக்கு ரூ25,000 கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கமல்ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை முழு விவரம்:
தனது முதல் தேர்தலிலேயே இத்தனைப் பிரம்மாண்டமான மக்கள் ஆதரவுடனும் நேர்மையான திறமையாளர்கள் புடை சூழவும் தேர்தலைச் சந்திக்கிற கட்சி எனும் பெருமிதத்துடன் உங்களை வாழ்த்துகிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
# தலை _ நிமிரட்டும் _ தமிழகம் pic.twitter.com/tBC6Q60yCt
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications