தமிழ்நாட்டிற்கு நியாயமான வரிப் பகிர்வு.. சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் மரிய வில்சன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய வரி பகிர்வை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனித் தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். ஏற்கனவே பட்ஜெட் தாக்கலின் போது தமிழக நிதிநிலை மோசமாக இருப்பதாகவும், அதனை சீர் செய்ய 2 ஆண்டுகள் அவசாகம் தேவைப்படும் என்றும் மரிய வில்சன் கூறி இருந்தார்.

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன் தினமும், வேளாண் பட்ஜெட் நேற்றும் தாக்கல் செய்யப்பட்டது. தவெக அரசு அமைந்த பின் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமல், மக்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இன்று முதல் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்க உள்ளது. இதனால் நேரமில்லா நேரத்தில் விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Budget 2026 2026 Maria Wilson TN Budget

இந்த நிலையில் மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய வரி பகிர்வை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனித் தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். அதில், மாநிலங்கள் தங்களின் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது ஆகும்.

தமிழ்நாடு தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்ற, சிரந்த நிதி மேலாண்மை மற்ரும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பித்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சி தேவைகள் ஆகிய கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும்.

மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது. இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும்.

மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் போது திமுக உட்பட அத்தனை கட்சியினரும் விவாதிக்க உள்ளனர். அதன்பின் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதில் அதிக வாக்கு கிடைக்கும் பட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+