இ.பி.எஸ், கவர்னர் ஆர்.என்.ரவியுடன்.. மத்திய அமைச்சர் முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி!
சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கலும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் வருகின்றன.

உள்ளாட்சி தேர்தல்
திமுக கூட்டணியை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திப்பதாக பாமக விலகிச் சென்று விட்டது. பாஜக-அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அ.தி.மு.க.வில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ஏற்கனவே தயாராகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
செங்கல்பட்டுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.விற்கு கணிசமான இடங்களை வழங்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் உலா வருகின்றன.

ஆர்.என்.ரவி
இந்த சந்திப்பு முடிந்தவுடன் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியை கவர்னர் மாளிகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்கள். ஆர்.என்.ரவி நாளை கவர்னராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தாக கூறப்படுகின்றன. அதே வேளையில் தமிழகத்தின் அரசியல் நிலவரம், திமுக ஆட்சி குறித்து அண்ணாமலை, முருகன் இருவரும் கவர்னரிடம் பேசியதாக ஒரு சில தகவல்கள் வருகின்றன.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான்












Click it and Unblock the Notifications