தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் (DHS), மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செவிலியர் உதவியாளர், ஆய்வக உதவியாளர் (Audiologist), மருத்துவர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thoothukudi job jobs Thoothukudi employment

பணியிடங்கள் விவரம்:

* ஆய்வக உதவியாளர் மற்றும் பேச்சு சிகிச்சை நிபுணர் (Audiologist and Speech Therapist) - 1 பணியிடம்
* சிகிச்சை உதவியாளர் (பெண்) - 1 பணியிடம்
* மாவட்ட தர ஆலோசகர் - 1 பணியிடம்
* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 7 பணியிடங்கள்
* பாதுகாப்பு காவலர் - 2 பணியிடங்கள்
* நூலகர் - புள்ளிவிவர ஆய்வாளர் - 1 பணியிடம்
* தொழில்சார் சிகிச்சை நிபுணர் (Occupational Therapist) - 1 பணியிடம்

* நிகழ்ச்சி - நிர்வாக உதவியாளர் - 1 பணியிடம்
* பல் தொழில்நுட்ப வல்லுநர் - 1 பணியிடம்
* மருத்துவர் - 2 பணியிடங்கள்
* வேன் கிளீனர் - 1 பணியிடம்
* கணக்கு உதவியாளர் - 1 பணியிடம்
* மருத்துவமனை பணியாளர் - 2 பணியிடங்கள்
* காசநோய் (TB) சுகாதார உதவியாளர் - 1 பணியிடம்
* ரேடியோகிராபர் - 3 பணியிடங்கள்
* சுகாதார ஆய்வாளர் தரம்-II - 9 பணியிடங்கள்
* ஏஎன்எம் (ANM) - 1 பணியிடம்
* ஆடியோ மெட்ரிக் உதவியாளர் - 1 பணியிடம்
* அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்ப வல்லுநர் - 3 பணியிடங்கள்
* செவிலியர் உதவியாளர் - 4 பணியிடங்கள்

கல்வித் தகுதி, வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடுகிறது. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மற்றும் பாதுகாப்பு காவலர் பணியிடங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மருத்துவ பணியிடங்களுக்கு (மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர்கள்) உரிய பட்டயப்படிப்பு (Diploma), இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தகுதியான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, 20.06.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தங்கள் பணிக்குரிய கல்வித் தகுதி, வயது வரம்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

சம்பளம் எவ்வளவு

* ஆய்வக உதவியாளர் மற்றும் பேச்சு சிகிச்சை நிபுணர் (Audiologist and Speech Therapist) - ரூ.23,000
* சிகிச்சை உதவியாளர் (பெண்) - ரூ.13,000
* மாவட்ட தர ஆலோசகர் - ரூ.44,000
* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500
* பாதுகாப்பு காவலர் - ரூ.8,500
* நூலகர் - புள்ளிவிவர ஆய்வாளர் - ரூ.22,000
* தொழில்சார் சிகிச்சை நிபுணர் (Occupational Therapist) - ரூ.23,000
* நிகழ்ச்சி - நிர்வாக உதவியாளர் - ரூ.20,000
* பல் தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.9,500
* மருத்துவர் - ரூ.63,000

* வேன் கிளீனர் - ரூ.11,000
* கணக்கு உதவியாளர் - ரூ.19,000
* மருத்துவமனை பணியாளர் - ரூ.11,000
* காசநோய் (TB) சுகாதார உதவியாளர் - ரூ.15,000
* ரேடியோகிராபர் - ரூ.17,000 / ரூ.8,000
* சுகாதார ஆய்வாளர் தரம் - II - ரூ.17,500
* ஏஎன்எம் (ANM) - ரூ.17,500
* ஆடியோ மெட்ரிக் உதவியாளர் - ரூ.20,000
* அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.6,000
* செவிலியர் உதவியாளர் - ரூ.6,000

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி - 628 002.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.06.2026 மாலை 05:00 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

* தூத்துக்குடி DHS பணி நிரந்தரமானதா? என்றால் இல்லை. இது ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிகப் பணியாகும். 44 பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்படுபவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

* விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியலிடப்பட்டு (Shortlisting), பின்னர் நேர்காணல் (Interview) நடத்தப்படும். பணி விவரத்தைப் பொறுத்து தேர்வு முறைகள் மாறுபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+