புதுச்சேரி பாஜக கூட்டணி அமைச்சரவை பதவியேற்பில் ஒலித்த இந்திய ஒன்றியம்- பதிலளிக்க மறுத்த எல்.முருகன்
சென்னை: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவை பதவியேற்ற போது இந்திய ஒன்றியம் என உச்சரிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகிறது. ஒன்றிய அரசு என குறிப்பிடுவது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
தமிழக சட்டசபையில் இது தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றியம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்பதில் கூட்டாட்சி தத்துவம் இருக்கிறது. அதனால் ஒன்றியம் என்கிற சொல்லை பயன்படுத்தினோம்- பயன்படுத்துகிறோம்- பயன்படுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

பா.ஜ.க. கொந்தளிப்பு
ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர்களோ ஒன்றிய அரசு என அழைப்பது பிரிவினைவாத சொல் என கூறி விமர்சித்தனர். அத்துடன் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால் தமிழக அரசு, பஞ்சாயத்து அரசா என்றும் கிண்டலடித்தனர்.

வழக்கு போடுவோம் என எச்சரிக்கை
தமிழக பாஜக நிர்வாகி கரு.நாகராஜன், ஒன்றிய அரசு என திமுக அமைச்சர்கள் அழைப்பது சட்டவிரோதமானது; தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விவாதம் இன்னமும் தொடருகிறது.

புதுச்சேரி என்.ஆர்.காங்- பா.ஜ.க. அமைச்சரவை
இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் 5 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். இந்த 5 அமைச்சர்களுக்கும் புதுவை துணை நிலை ஆளுநராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவை பதவியேற்பில் ஒலித்த ஒன்றியம்
பாஜகவை சேர்ந்த ஆளுநரான தமிழிசை சவுந்தராஜன், பாஜக கூட்டணி அரசு அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது, இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்புக்குட்பட்ட என குறிப்பிட்டார். பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் அமைச்சர்களும் இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்புக்குட்பட்ட என வாசித்தே பதவியேற்றுக் கொண்டனர்.

எல். முருகன் மழுப்பல்
இந்த பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஒன்றியம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது புதுச்சேரியில் ஒன்றியம் என உச்சரித்து பாஜகவினரே பதவியேற்றது குறித்து செய்தியாளர்கள் எல். முருகனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல், நானும் அந்த விழாவுக்கு சென்றேன். இந்த கேள்விக்கு பின்னர் பதிலளிக்கிறேன் என மழுப்பலாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டார் முருகன்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications