TN Budget:அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம்- மீண்டும் கருணாநிதியின் கனவு திட்டங்கள்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டங்களான அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டங்களுக்கு தமிழக பட்ஜெட்- நிதி நிலை அறிக்கையில் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபையில் நிதிநிலையை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
2021-22-ம் ஆண்டில் ரூ1200 கோடி ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தொடங்க உள்ளது. இத்திட்டம் குக்கிராம அளவில் உட்கட்டமைப்புகளுக்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

கருணாநிதியின் திட்டம்
கருணாநிதி அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் நமக்கு நாமே திட்டம். இத்திட்டம் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-22ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அண்ணா மறுமல்ர்ச்சி திட்டம் என்றால் என்ன?
கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ஊரக பகுதிகளில் சமுதாய சொத்துக்களை உருவாக்கவும், பராமரிக்கவும், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குமான தேவைகள் அதிகமாகவே உள்ளன. 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சிக்கென குறிப்பிட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஊராட்சிகளால் நிறைவேற்றப்பட வேண்டிய குறிப்பிட்ட பொருட்களை நடைமுறையில் உள்ள திட்டங்கள் மூலம் நிறைவேற்ற முடிவதில்லை. மேலும், பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதாரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன. தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழிகாட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையிலும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்" ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன பணிகள் செய்யும்?
அதாவது தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்கான திட்டம்தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். இத்திட்டம் தொடர்பாக முன்னர் ஒருமுறை விளக்கம் அளித்திருந்த தற்போதையா முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டுவந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் விருப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சிக்கு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் ரூ.20 லட்சம் திட்டத்தின் அடிப்படையில் வழங்கினோம். மற்ற துறைகள் மூலமாகவும் ஏறத்தாழ ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 கோடி அளவுக்கு நிதி வழங்கி பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

பெயர் மாற்றிய அதிமுக
நமக்கு நாமே திட்டமும் ஊரகப் பகுதிகளின் அடிப்படை மேம்பாட்டுக்கானது. இத்திட்டம் அதிமுக ஆட்சியில் கிராம தன்னிறைவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போதும் இது நடைமுறையில் இருந்து வருகிறது. இது மீண்டும் நமக்கு நாமே திட்ட்டமாக தற்போதைய திமுக அரசால் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications