கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தலைநிமிர்ந்து வருகிறேன்.. வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீரா? என உருக்கமாக பேசியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை திமுகவினர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இன்றைய நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ2,000 வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமது சமூகவலைதளப் பக்கங்களில 'தலைநிமிர்ந்து வருகிறேன்' என்ற தலைப்பில் #KalaignarForever என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக ஆக்கிய தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்; முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் பிறந்த ஜூன் 3.
ஒரு தொண்டன், தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். இன்று கம்பீரமாக வருகிறேன்...

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்... நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றி காட்டி விட்டேன் என்று சொல்ல நெஞ்சை நிமிர்த்தி வருகிறேன்... வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீரா தலைவர் அவர்களே? இவ்வாறு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications