இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் திருத்த வேண்டும்..சீரியஸாக சொன்ன முதல்வர்..ஆமோதித்த அமைச்சர்கள்
சென்னை: சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை சட்டசபைக்கு வழங்கி விட்டு அதற்கு ஒப்புதல் கையெழுத்து போதும் அதிகாரத்தை நியமன ஆளுநருக்கு அளித்தது மக்களாட்சியின் மாண்பு ஆகாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும்.

ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். சர்க்காரியா அறிக்கை கூறியதை அறியாதவர் போல பேசுகிறார் ஆளுநர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் . அரசியல் கட்சிக்கு அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது.
மாநில சுயாட்சிக்கான முதல்வர் ஸ்டாலின் யுத்தம்- ஆளுநர் ரவிக்கு எதிராக 4 மாதத்தில் 2-வது தீர்மானம்!
ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன்; ஆனால், அவரது அரசியல் விஸ்வாசம், அரசியல் சட்ட விஸ்வாசத்தை விழுங்கிவிட்டது. அதனால்தான், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார்.
சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை சட்டசபைக்கு வழங்கி விட்டு அதற்கு ஒப்புதல் கையெழுத்து போதும் அதிகாரத்தை நியமன ஆளுநருக்கு அளித்தது மக்களாட்சியின் மாண்பு ஆகாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆளுநருக்கு எதிராக பேசும் போது அமைச்சர்கள் அனைவரும் அதை ஆமோதிக்கும் வகையில் கை தட்டி ஆமோதித்தனர்.












Click it and Unblock the Notifications